ஞாயிறு, 17 ஜூலை, 2016

அனாகதம் நான்காவது சக்கரம்.

          அனாகதம் (நெஞ்சகம்) இது மணிப்பூரகத்திற்கு மேல் பத்து விரலளவு உள்ளது இது இதயக்கமலமாகும். தேயு நிலையில் முக்கோனமாய் இருக்கும் முக்கோணத்தின் நடுவில் பண்ணிரு இதழுடைய மலர் வட்டமும், அதன் நடுவில் "சி"கார " எழுத்தும்,சிகாரத்தின்நடுவில் உருத்திரனும்.பார்வதியும் .அமர்ந்திருப்பர்.இது அக்னி நிறமுடையது.
மனிதன் உணர்ச்சியாலும் அறிவாலும், ஆனவன்  அதன் மையப்புள்ளி நெஞ்சு.
              உலகத்தில் அன்பு கருணை பாய்ச்சுபவர்கள், அதனை உலகெங்கும் வழிந்தோட விடுபவர் குண்டலினி அனாகத நிலையில் உள்ளவர்கள். அனாகத நிலைவரை குண்டலினி மேல்எழுந்து இறங்குவது சுலபம்..பலருக்கு இந்நிலை வாய்க்கும். ஆனால் அனாகதம் கடப்பது என்பது மிகச்சிலருக்கே சாத்தியம்.
           காரணம் மூலாதாரம், சுவாதிட்டானம் இவை இரண்டும்  பஞ்சபூதங்களில் பூமியுடன் தொடர்புடையது. மணிப்பூரகம், அனாகதம் இரண்டும் தண்ணீருடன் தொடர்புடையவை. விசுத்தி காற்றுடனும். ஆக்ஞா நெருப்புடனும் சம்மந்தம் உடையவை.
          மண்ணும் நீரும் கீழ் நோக்கி பாயும் வலிமை பெற்றவை.காற்றும் நெருப்பும். மேல் நோக்கிப்பாயும் வலிமை உடையவை.அனாகதம் கீழ் மேல் நிலைகளின் சங்கமம்.
            இங்கிருந்து மனிதன் கீழ் நோக்கிப் பயணித்து விலங்கானதும் உண்டு. வீணானதும் உண்டு. மேல் நோக்கிப் பயணித்து கடவுளாவதும் உண்டு. எனவே கடவுள்+விலங்கு என்பதன் மையப்புள்ளியாகிய மனிதன் நெஞ்சை (அனாகதத்தை) தட்டி தட்டி நான் நான் என்று வயிற்றிலும் மார்பிலும் தட்டிக்கொள்கிறான்.
               விசுத்தி ஆக்ஞை சகஸ்ரம் என்று மேல் நோக்கிப் பாய்ந்து விட்ட ஞானிகள், சித்தர்கள்,மகான்கள்கூட அனாகதம் வரை கீழிறங்கி வந்து மனிதநிலையில் நம்முடன் வாழ்ந்து அன்புகாட்டுவார்கள். அதைவிட கீழிறங்கி மணிப்பூரகம், சுவாதிட்டானம், மூலாதாரத்தில் இருந்து கீழான வாழ்வு வாழ  மாட்டார்கள்.
           மூலாதாரம் முதல் அனாகதம் வரை உணர்ச்சி மையம். அனாகதம் முதல் துரியம் துரியாதீதம் வரை அறிவு மையம்.எனவெ அனாகதம் அறிவும் உணர்ச்சியும் சந்திக்கின்ற மையப்புள்ளி.

           மருத்துவ உலகின் கணிப்பின்படி இதயம் என்பது குடிடிநீர் வடிகால் வாரியம் அமைந்திருக்கும் பம்ப்பிங் ஸ்டேஷன் மாதிரிதான்.கழிவு பொருள்களை சுமந்த அழுக்கு ரத்தத்தைச் சுத்திகரித்து நல்ல ரத்தமாய் மாற்றி உடம்பு முழுக்க பம்ப் செய்யும் தசை மோட்டார் அது.
           இதயத்தில் நான்கு அறைகளிலும் தனித்தனியாக நல்ல ரத்தமும் கெட்ட ரத்தமும் உண்டு.மொத்தமாகப் பார்தால் நல்லதும் கெட்டதும் சுமந்தது இதயம்.நல்லது கெட்டதின் மையப்புள்ளி அது. மருத்துவம் கடந்து ஆன்மீகமாக இதயத்தை கவனித்தால் நல்லது கெட்டது கலந்த மனிதனின் மையம் இதயம்.எவ்வளவு பொருத்தம் பார்தீர்களா?
          ஞானம் நெருப்பாய் எரியும் ஆக்ஞையில் நிற்பவர்கூட கருணை காரணமாக அனாகதத்தில் நின்று தண்ணீராய் குளீர்வார்கள்,கருணைப் பொழிவார்கள், ஞானிகளும் ரிஷிகளும் சித்தர்களும்.இவர்களை துணைகொண்டு வாருங்கள் அடுத்த சக்கரமான விசுத்தி சக்கரத்திற்க்கு போகலாம்.
        அன்புன் ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.
         
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக