63 நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனார்.
இடங்கழி நாயனார் இயற்கை வளமும், செயற்கை வளமும், தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளுரிலே, குறுநில மன்னர் குலத்திலே - கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழருடைய குடியிலே அவதரித்தார். இவர் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும், வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது.
வரலாறு :
✫ இவர் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும், தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து வந்தார். இவரின் வெண்கொற்றக்குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தனர். அவ்வாறு சைவம் வளர்த்த சிவனடியார்கள் பலருள், இவரும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து மகிழும் அருந்தவப் பணியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் புரியும் திருப்பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அமுது அளிப்பதற்குப் போதிய நெல் கிட்டாமல் இவர் அவதிப்பட்டார்.
✫ நெல் தட்டுப்பாட்டால், இவரது விருந்தோம்பல் அறத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவர் செய்வதறியாது சித்தம் கலங்கினார். மனம் தளர்ந்தார். முடிவில் இவர் அரண்மனைக் களஞ்சியத்தில் நெல்லைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தார். நள்ளிரவு வேளையில் இவர் அரண்மனைக்குள் நுழைந்து நெல் கட்டு நிறைகளுள்ளிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார். திருட்டு தொழிலில் அனுபவம் இல்லாததால் இவர் அரண்மனைக் காவலர்களிடம் சுலபமாக மாட்டிக் கொண்டார்.
✫ இவரைக் கைது செய்து அரசர் முன் நிறுத்தினார்கள். காவலர்வாயிலாக விவரத்தைக் கேள்வியுற்ற அரசர் இவரின் சிவப்பொலிவைக் கண்டு திகைத்தார். 'ஐயனே! சிவக்கோலம் தாங்கியுள்ள தேவரீர் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் யாது?" என்று வேதனையோடு கேட்டார் அரசர். சோழப் பெருந்தகையே! அடியேன் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்து ஒழுகும் திருப்பணியைத் தவறாமல் நடத்தி வந்தேன். எமது சிறந்த திருப்பணிக்கு தடை ஏற்பட்டது.
✫ அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் கவர்ந்து செல்வது என்ற முடிவிற்கு வந்தேன். இவர் சொல்லியது கேட்டு சிந்தை நெகிழ்ந்த அரசர் அடியவரைக் காவலினின்று விடுவித்து பணிந்து தொழுதார். 'அடியேனுக்கு இவர், அல்லவா களஞ்சியம் போன்றவர்" என்று பெருமிதத்தோடு கூறினார் அரசர், இவருக்குத் தேவையான பொன்னையும், பொருளையும் கொடுத்தனுப்பினார். அத்தோடு அரசர் மன நிறைவு பெறவில்லை. களஞ்சியத்திலுள்ள நெற்குவியல்களையும், பொன் மணிகளையும் தமது நாட்டிலுள்ள சிவனடியார்கள், அவரவர்களுக்குத் தேவையான அளவிற்கு எடுத்துச் செல்லட்டும். எவ்வித தடையும் கிடையாது! என்று நகரமெங்கும் பறைசாற்றுங்கள் என்று அரசர் கட்டளை இட்டார;.
சனி, 2 ஜூலை, 2016
இடங்கழி நாயனார் வறலாறு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக