அருள்மிகு திருவாரூர். தியாகராஜரர் கோவில்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோவில்களுள் ஒன்று.
இக்கோவில் நாயன்மார்களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.
இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு :
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த 'விடங்க லிங்கத்தை" கேட்டார்.
தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டுபிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன. இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப்படுகின்றன.
கோவில் அமைப்பு : 33
ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோவிலில் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும். இத்தலத்தின் கோவில் கமலாலயக் குளம், இறைவனுக்குச் சார்த்தப்பெறும் செங்கழுநீர்.மலரோடை இவை ஒவ்வொன்றும் ஐந்துவேலி (ஐந்து வேலி - 1000 அடி நீளம் 700 அடி அகலம்) பரப்புடையது. தல
சிறப்புகள் : இத்தலம் நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம், எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம், சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர்) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம், நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம், நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம்.
அன்பு ஆத்மா த.சிவகிரி .ஓம் சிவார்ப்பணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக