வியாழன், 12 மார்ச், 2015

காமதேவன் புராணம்

சிவார்ப்பணம் :கந்தபுராண வரலாற்றில் முதல் காலகட்டத்தில், பிரம்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தட்சன் என்பவர். தன்சகலகலைகளையும் தன் தந்தையார் பிரம்மாவிடத்தில், 
கற்றார் பிறகு தந்தையே, உலகின் முழுமுதற் கடவுள் யார் என்று கேட்டார். அதற்கு பிரம்மா, சிவபெருமான் தான் அகிலவுலகத்திற்க்கும் தன்னிகரற்ற தெய்வம் என்று கூறினார். இதையடுத்து தட்சன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார், தவத்திற்கு இறங்கி சிவபெருமான். தட்சனே உணக்கு என்னவரம் வேண்டும் என்று கேட்டார். தட்சன் சிவபெருமானை வணங்கி ஐயனே உண்மனைவியான, உமாதேவி எனக்கு மகளாக பிறக்க வேண்டும் அகில உலகையும் நான் ஆட்சிசெய்யவணடும் தேவர் மூவர் யாவரும் எனக்கு கீழ் படிந்து நடக்கவேண்டும். என்று கேட்டார் கருணை தெய்வம் அப்படியே வரம் தந்துவிட்டார். அதன்பிறகு ஒரு நாள் நீராடி திரும்பும் போது ஓர் வலம்புரி சங்கை கண்டான். அதைக் கையில் எடுக்க ஓர் அழகான பெண் குழந்தையாக மாற அம்பிகையே மகளாக வந்த சந்தோஸத்தில் வாரிஎடுத்து உச்சி முகர்ந்து தன் மனைவியிடம் கொடுத்து வளர்த்து வந்தார் தாட்சாயனி என்ற பெயரில். ஏன் தட்சன் மகளல்லவா, பருவத்தை தாட்சாயனிக்கும் சிவபெருமானை மணம்பேசி முடித்து திருமணம்த்திற்கு தேவாதி தேவர்கள் பிரம்மா விஷ்ணு உருத்திரர் எல்லாம் ஒன்று கூடி நின்று தாட்சாயனிக்கு திருமண சடங்குகள் நடந்தன அப்போது தாரவார்கும் நிகழ்ச்சி, எப்போதும் கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழ் இருக்கும், இந்த இடத்தில் தட்சன் நினைத்தான் ஆஹா ஈசனே என்னிடம் யாசிக்கின்றான் என்று கர்வம் கொண்டான், அடுத்த கணம் ஈசன் மறைந்து விட்டார். (தொடரும்) 2 ல்