ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

ஓகம் (யோகம்)

எல்லாம் வல்ல இறைவன் திருவருள் கொண்டு, ஈஸ்வர சைதன்ய, சொரூபமாகிய உங்களை வணங்கி இந்த தொடரினை எழுதுகிறேன், பிழை இருந்தால் ஆதாரங்கள் மூலம் சுட்டிக்காட்ட விழைகிறேன். யோகம் என்பது என்ன, 
யோகம் பற்றிய இந்திய ஞானிகளின் பொதுகருத்துகளையும், தமிழகத்தில் தலைசிறந்த ஞானிகளிளாகிய, சித்தர்களின் கருத்துக்களையும் இரண்டறக் கலந்து செய்ததே, முக்காலம் உணர்ந்த சித்தர் திருமூலரின் திருமந்திரம். 
கந்தபுராணம் கூற்று படி சூரனைக் கொல்லத் தம் ஐந்து முகத்துடன்,அதோமுகமும் சேர்த்து, இறைவன் ஆறுமுகனை தந்தார் _என்ற புராண வரலாற்றால் கூறும் உண்மை. 
மூலாதாரத்தில் இருந்து ஒரு சுடர் ஆறு ஆதாரங்களையும் கடந்து உச்சிக்கு போவது என்பதைக் குறித்தார். திருமந்திரம்,186 
மூளையும் தண்டுவடமும் பிரியும் இடமே அதோமுகமும் எனப்படும்.எண் திசை =எண்சாண் உடம்பு. அண்டம் மூளையும் தண்டுவடமும். (திருமந்திரம் 187)
நந்தி எழுந்து நடுவுற ஒங்கிய 
செந்தீ கலந்துஉள் சிவன் எனவே நிற்கும் 
உந்தி கலந்து அங்கு உலகை வலம் வரும் 
அந்தி இறைவனை அதோமுகமும் ஆமே. (
திருமந்திரம் 523) 
நந்தியைக் குருநாதராகக் கொள்வது இந்நூல் வழக்கம் இதற்கு முன் உயிர் காலின் இயக்கம் பற்றி தெரிந்து கொள்வோம். (சரம்) 
சரம் என்பது உயிர்க் காலின் பிராணவாயு அது மூக்கின் இரு துளைகளில் உள்ளும் புறமும் செல்வதாக இருக்கும். இடது மூக்குத்துளைக வழியில் செல்வதை இடகலை என்றும் வலதுமூக்கு துளைவழியாகச் செல்வதைப் பின்கலை என்றும் கூறப்படுகிறது. மூச்சுக் காற்று இரண்டும் ஒரே நேரத்தில் இரண்டு மூக்குத்துளை வழியில் செல்வதும் இல்லை வருவதும் இல்லை, அதாவது முதலில் இடத் துளைவழியாக ஐந்து நாழிகை (2 மணிநேரம்) தான் மூச்சு செல்லும் பின்னர் வலத்துளை மாறி ஐந்து நாழிகை நடக்கும். அதுவும், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில், இடப்பக்கம் காலை 4 மணிக்கு தொடங்கி ஐந்து ஐந்து நாழிகை இட பிங்கலையில் மாறி மாறி நடக்கும், செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வலப்புறம் தொடங்கி ஐந்து ஐந்து நாழிகை மாறி மாறி நடக்கும், இங்ஙனம் வியாழக்கிழமை வளர்பிறையில், இடப்பக்கம், தேய்பிறையில் வலப்புறம் நாசியில் மாறி மாறி நடக்கும்.