சனி, 31 அக்டோபர், 2015

ஏழகோடி மந்திரம் என்றால் என்னவென்று கான்போம்.

அன்பு ஆத்மாக்களுக்கு வணக்கம். மந்திரங்கள் ஏழ கோடி உள்ளது என்று நூல்கள் கூறுகின்றன. அவை யாவும் ஏழ செயல்களில் முடிவில் வரும், 1.(நம) 2.(சுவாதா) 3.(சுவாகா) 4.(வௌஷட்) 5.(ஹூம்) 6.(வஷட்) 7.(பட்) என்ற இறுதி சொற்களே ஏழகோடி மந்திரம் எனப்படுகிறது. ஆதாரம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்ற நூல் கூறுகிறது.
மந்திரங்கள் பலவகை, அவைகள் தலைமையால் 71 வகையாகச் கூறப்படுகிறது. அவற்றிலும் சிறந்தவை :
(1)மூல மந்திரம் (2)பீஜா மந்திரம் (விதை மந்திரம்)(3)பஞ்ச மந்திரம் (4)சடங்க மந்திரம் (5)சம்ஹிதா மந்திரம் (6)காயத்ரி மந்திரம் (7)அஜபா மந்திரம் (8)பிராணப் பிரதிஷ்டா மந்திரம் (9)அஷ்டகர்ம மந்திரம் (10)பஞ்ச கிருஷ்திய மந்திரம் (11)ஏகாட்சர மந்திரம் (12)திரியட்சரி மந்திரம் (13)பஞ்சாட்சர மந்திரம் (14)சடாட்சர மந்திரம் (15)அட்டாட்சர மந்திரம் (16)நவாட்சரி மந்திரம் (17)பஞ்சதசாட்சரி மந்திரம் (18)பிரசாத மந்திரம் (19)நியாச மந்திரம் (20)கவச மந்திரம் (21)உபதேச மந்திரம் (22)தனித்தனித் தெய்வ மந்திரம் (23)எல்லா பொருள்களுக்கும் உரிய அதிதேவதை மந்திரம்.
என பல்வேறு மந்திரம் உள்ளது
மந்திரத்திற்கு வலிமை உள்ளது.
மந்திரத்தால் அழைத்திடவே வானவரும் வந்திடுவர்
மந்திரத்தால் வசிகரண முதல் வலிகள் வந்துஎய்தும்
மந்திரத்தால் ஆக்கிஅளித்து அழித்திடலும் ஆக்கியிடும்
மந்திரத்தின் வலியவர்காண் வானவரும் மானவரும்.
(தத்துவ நிசாத யோகசாரம். அத்தியாயம் 75:282)

ஆக்ஸிஜன் (Oxygen) தேவை எவ்வளவு

ஒரு நாளில் ஒரு மனிதன் சுவாசிக்கின்ற உயிர்க்காற்று (Oxygen) மூன்று பிராணவாயு சிலிண்டர்களுக்கு சமமானது. ஒரு பிராணவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாய். ஒரு நாளுக்கு தேவை 2,100 ரூபாய் ஒராண்டுக்கான இதன் மதிப்பு ரூபாய் 7,66.500 /.
சராசரி ஆயுள் 65 ஆண்டுகளுக்கு தேவைப்படும் பிராணவாயுவின் மதிப்பு 5,00,00,000 ரூபாய்! இவ்வளவு மதிப்புமிக்க உயிர் காற்று எங்கிருந்து வருகிறது? நம்மைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து வருகிறது! ஓர் அரச மரம் தன்னை சுற்றி 500 மீட்டர் தூரம் வரை காற்றை தூய்மை செய்து, பிராணவாயுவை தரும் வல்லமை படைத்தது. அதனால்தான் நம்முன்னோர்கள் காக்கும் கடவுள் விஷ்ணுவின் அம்சமாக கருதினார்கள். வேப்பமரம் அம்மன் இருக்கும் இடம் என்றும். ஆலமரம் ஐய்யனார் இருக்கும் இடமாகவும், இப்படி நமக்கு ஆக்ஸிஜன் தரும் மரங்களை காக்க வேண்டும் என்று தெய்வத்தன்மை உடையதாகவும். கரியமில வாயுவை தரக்கூடிய புளியமரம் போன்ற மரங்களை பிசாசுகள் தங்கும் மரம் என்று கூறியுள்ளனர். நம்மில் மிக சிலருக்கு மட்டும் மரங்களின் மதிப்பு தெரிகிறது எல்லாருக்கும் எப்போது விழிப்புணர்வு வரும். மண்ணை நேசிப்போம் மரங்களை நட்டு மக்களை காப்போம்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கவிச்சக்கரவர்தி

(1)கம்பரின் தகப்பனார், ஆதித்தன்
(2) தாயார்,    திலகவதி
(3) பிறந்த ஊர், தேரழந்தூர்.
(4) பிறந்த காலம்,    கிருஷ்.பின்,840-920
(5) ஆரம்ப கல்வி -தேரழந்தூரில்,
(6) பாண்டித்யம் பெற்றது, -சென்னை திருவொற்றியூர்.
(7) புரவலர், -சடையப்ப வள்ளல்
(8) மனைவி பெயர், -நிகர்த்தவல்லி (சதுரானனபண்டிதர் மகள்)
(9) திருமணம் நடந்த இடம் -மயிலாப்பூர்,
(10) முன்னிலை -திருவாலி அமுதனார்.
(11) பிறந்த மக்கள் -அம்பிகாபதி, காவேரி.
(12) அம்பிகாபதி பிறந்தது -காஞ்சி அம்பியில்,
(13) கம்பர் வாழ்திருந்த மாளிகை - தேரழந்தூர் -அம்பி
(14) முதல் அரங்கேற்ற நூல் - ஏர் எழபது திருக்கை வழக்கம்.
(15) முன்னிலை - முதலாம் ஆதித்த சோழர், சடையப்பர்.
(16) இடம் -காஞ்சியில்
(17)இராமாயணம் தொடக்கம் -வெண்ணெய் நல்லூர் இறுதியாக எழிதிமுடித்தது திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் காளி சன்னதியில்.
(18) இராமாயணம் அரங்கேற்றம் -திருவரங்கம் தாயார் சன்னதி எதிரில். ஸ்ரீ மத் நாதமுனிகள் முன்னிலையில் கிருஷ், பி. 823-918
(19) கம்பர் பூஜை செய்த கோவில்கள் -தேரழந்தூர் காளிக்கோயில் மற்றும் பாலசேத்திரபுரம் (காளி) இந்த காளிதான் இவருக்கு கவி அருளினார்.
(20) இறுதிக்கட்டத்தில் வாழ்ந்தது -சேரமன்னன் தாணுரவி அரண்மனை பத்மநாபபுரம் கோட்டை (முதல் ஆதித்தன் சம்பந்தி)
(21)கம்பர் தன்னுடன் கொண்டு வணங்கி வந்த சரஸ்வதி சிலை ஐம்பொன்னாலானது ஓரடி சிலை சரஸ்வதி அந்தாதி இயற்சியதும் -பத்மநாபபுரம் கோட்டையில் தாணுரவி சரஸ்வதி ஆலையம் கட்டி இன்றளவும் பிரசித்தி பெற்று வருகிறது.
(22) கம்பர் இயற்றிய நூல்கள் - 1.இராமாயணம், 2. நாலாயிரதிவ்யப் பிரபந்தம் பாசுரம், 3. சரஸ்வதி அந்தாதி, 4.இலக்குமி அந்தாதி, 5. சடகோபர் அந்தாதி, 6. ஏர் எழபது, 7. திருக்கை வழக்கம், 8. காஞ்சிபுராணம், 9. காஞ்சி பிள்ளைத்தமிழ், 10. காஞ்சிக்குறவஞ்சி, 11. செம்பொற்சிலை எழபது, 12. மும்மணிக்கோவை, 13. சோழர் குறவஞ்சி, 14.தனிப்பாடல்கள், 15.இராமாயணம் உரைநடை, 16.தமிழ் அகராதி.
(23)கம்பர் சமாதி -நாட்டரசன் கோட்டையில்
(24)கம்பர் கோட்டம் தேரழந்தூர், மணிமகுடம் காரைக்குடி
(24). 5-4-1966 ல் கம்பர் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
(25) கம்பருக்கு அளிக்க பட்ட விருதுகள் -அபிநவ கவிநாதன், கவிச்சக்கரவர்தி, கந்பநாட்டாழ்வார். கம்பர் உவச்சர் குலத்தில் தோன்றியவர்.