சனி, 31 அக்டோபர், 2015

ஆக்ஸிஜன் (Oxygen) தேவை எவ்வளவு

ஒரு நாளில் ஒரு மனிதன் சுவாசிக்கின்ற உயிர்க்காற்று (Oxygen) மூன்று பிராணவாயு சிலிண்டர்களுக்கு சமமானது. ஒரு பிராணவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாய். ஒரு நாளுக்கு தேவை 2,100 ரூபாய் ஒராண்டுக்கான இதன் மதிப்பு ரூபாய் 7,66.500 /.
சராசரி ஆயுள் 65 ஆண்டுகளுக்கு தேவைப்படும் பிராணவாயுவின் மதிப்பு 5,00,00,000 ரூபாய்! இவ்வளவு மதிப்புமிக்க உயிர் காற்று எங்கிருந்து வருகிறது? நம்மைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து வருகிறது! ஓர் அரச மரம் தன்னை சுற்றி 500 மீட்டர் தூரம் வரை காற்றை தூய்மை செய்து, பிராணவாயுவை தரும் வல்லமை படைத்தது. அதனால்தான் நம்முன்னோர்கள் காக்கும் கடவுள் விஷ்ணுவின் அம்சமாக கருதினார்கள். வேப்பமரம் அம்மன் இருக்கும் இடம் என்றும். ஆலமரம் ஐய்யனார் இருக்கும் இடமாகவும், இப்படி நமக்கு ஆக்ஸிஜன் தரும் மரங்களை காக்க வேண்டும் என்று தெய்வத்தன்மை உடையதாகவும். கரியமில வாயுவை தரக்கூடிய புளியமரம் போன்ற மரங்களை பிசாசுகள் தங்கும் மரம் என்று கூறியுள்ளனர். நம்மில் மிக சிலருக்கு மட்டும் மரங்களின் மதிப்பு தெரிகிறது எல்லாருக்கும் எப்போது விழிப்புணர்வு வரும். மண்ணை நேசிப்போம் மரங்களை நட்டு மக்களை காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக