சனி, 31 அக்டோபர், 2015

ஏழகோடி மந்திரம் என்றால் என்னவென்று கான்போம்.

அன்பு ஆத்மாக்களுக்கு வணக்கம். மந்திரங்கள் ஏழ கோடி உள்ளது என்று நூல்கள் கூறுகின்றன. அவை யாவும் ஏழ செயல்களில் முடிவில் வரும், 1.(நம) 2.(சுவாதா) 3.(சுவாகா) 4.(வௌஷட்) 5.(ஹூம்) 6.(வஷட்) 7.(பட்) என்ற இறுதி சொற்களே ஏழகோடி மந்திரம் எனப்படுகிறது. ஆதாரம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்ற நூல் கூறுகிறது.
மந்திரங்கள் பலவகை, அவைகள் தலைமையால் 71 வகையாகச் கூறப்படுகிறது. அவற்றிலும் சிறந்தவை :
(1)மூல மந்திரம் (2)பீஜா மந்திரம் (விதை மந்திரம்)(3)பஞ்ச மந்திரம் (4)சடங்க மந்திரம் (5)சம்ஹிதா மந்திரம் (6)காயத்ரி மந்திரம் (7)அஜபா மந்திரம் (8)பிராணப் பிரதிஷ்டா மந்திரம் (9)அஷ்டகர்ம மந்திரம் (10)பஞ்ச கிருஷ்திய மந்திரம் (11)ஏகாட்சர மந்திரம் (12)திரியட்சரி மந்திரம் (13)பஞ்சாட்சர மந்திரம் (14)சடாட்சர மந்திரம் (15)அட்டாட்சர மந்திரம் (16)நவாட்சரி மந்திரம் (17)பஞ்சதசாட்சரி மந்திரம் (18)பிரசாத மந்திரம் (19)நியாச மந்திரம் (20)கவச மந்திரம் (21)உபதேச மந்திரம் (22)தனித்தனித் தெய்வ மந்திரம் (23)எல்லா பொருள்களுக்கும் உரிய அதிதேவதை மந்திரம்.
என பல்வேறு மந்திரம் உள்ளது
மந்திரத்திற்கு வலிமை உள்ளது.
மந்திரத்தால் அழைத்திடவே வானவரும் வந்திடுவர்
மந்திரத்தால் வசிகரண முதல் வலிகள் வந்துஎய்தும்
மந்திரத்தால் ஆக்கிஅளித்து அழித்திடலும் ஆக்கியிடும்
மந்திரத்தின் வலியவர்காண் வானவரும் மானவரும்.
(தத்துவ நிசாத யோகசாரம். அத்தியாயம் 75:282)

1 கருத்து:

  1. Please tell, in which book is written, the above poem about power of manthras.
    You mentioned it as தத்துவ நிசாத யோகசாரம்.
    I want to get / buy that book.

    - Vallinayagam,

    பதிலளிநீக்கு