புதன், 21 செப்டம்பர், 2016

நட்சத்திமும் மந்திரமும்.

                                                                  நட்சத்திரமும் மந்திரமும்.
                       மந்திரம் என்பது ஒரு நம்பிக்கையாகும். நேற்று அஸ்வினி நட்சத்திரம் முதல் சுவாதி நட்சத்திரம் வரையிலான                                                    மந்திரத்தை பார்த்தோம்.
                         இன்று மீதமுள்ள விசாகம் நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரையிலான மந்திரத்தை பார்ப்போம்.
                   விசாகம் :
           பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
                    அனுஷம் :
             மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
                   கேட்டை :
             தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

                    மூலம் :
              திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
                  பூராடம் :
              அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
                  உத்திராடம் :
               கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய

                   திருவோணம் :
              இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
                  அவிட்டம் :
               அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
                    சதயம் :
              ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
                  பூரட்டாதி :
             புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
                  உத்திரட்டாதி :
             அந்த காந்த காய பாப ஹhரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
                     ரேவதி :
                 சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய.  
                  இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து இறைவனை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
                   நட்சத்திரமும் அணிய வேண்டிய ருத்ராட்சத்திர முகங்களும் : அஸ்தம் - இரண்டு முகம். சித்திரை - மூன்று முகம். சுவாதி - எட்டு முகம்.
               அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சாஸ்திரம் கூறும் உண்மை.

            சாஸ்திரம் கூறும் சில முக்கிய எச்சரிக்கைகள்.
               சாஸ்திரங்கள் பல வகையான கருத்துகளை நமக்கு எடுத்து கூறுகின்றன. அதை ஆராய்ந்து நல்லது கெட்டது என பிரித்து நம் நடந்து கொள்ளுதல் நன்மையை தரும். இப்போது சாஸ்திரங்கள் கூறும் சில முக்கிய எச்சரிக்கையை நம் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வோம்.
          🌟 குளிக்கும்போது நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும்.
          🌟 தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது.
          🌟 நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது.
          🌟 கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது.
          🌟 சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது.
          🌟 எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது.
          🌟 இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும்.
         🌟 வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம் துப்பக்கூடாது.
         🌟 அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது.
        🌟 தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப்பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது.
        🌟 ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது.
        🌟 கடும்வெயில், மயானப்புகை, தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்.
         🌟 இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
         🌟 இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

            நட்சத்திரங்களும் வழிபட வேண்டிய திருத்தலங்களும் :
            பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதிசேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்.
            உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தட்ஷிணாமூர்த்தி - திருவையாறு.
          ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்.
              அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் திருத்தம் திருநல்லாறு!


                திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோவில் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது பாடல் பெற்ற இத்தலம் காரைக்காலில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது நம்பிக்கை ஆகும். இங்குள்ள சனிபகவான் சன்னிதி பிரசித்தி பெற்றதாகும். சப்த விடங்கத் திருத்தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது.
            கோவில் வரலாறு :
               தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனை துன்புருத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார். அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.
              எனவே நளனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் சனீஸ்வரன் என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கின்றார்.
          கோவில் அமைப்பு :
          நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரமும் அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக உள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது.
              சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சன்னிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார்                             
          அதையடுத்து அம்பாள் சன்னிதி உள்ளது. உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரம்மனும், துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சன்னிதி தலவிநாயகர் சன்னிதியாகும்.
            சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சன்னிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சன்னிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம்.
            தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் நடைபெறும். மேலும், வைகாசியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
            பரிகாரங்கள் :
               சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வானி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
          களத்திர தோஷம் நீங்க..! சுமங்கலி பெண்களுக்கு துணி வகைகள், தேங்காய், பூ, பழம், தாலிக் கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெற்றால் களத்திர தோஷம் நீங்கும்.
                அன்பு ஆத்மா .சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

சிவராத்திரி அறிவோம்!!


             சிவராத்திரி என்பதற்கு 'சிவனுக்கு உகந்த இரவு" என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்திசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
              புராணக் கதை :
            பிராமவுக்கும் விஷ்ணுவுக்கும் போர் உண்டான போது இருவருக்கும் ஓர் போட்டி வைத்தார் ஈசன். யார் முதலில் தன் திருமுடியையும் பாதத்தையும் பார்க்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர் என்று ஈசன் கூறினார். அதில் திருவடியை பிரம்மன் பார்த்ததாக போய் சொன்னாதல் ஈசன் கோபமுற்று அண்ணாமலையில் ஜோதி பிழம்பாய் அமர்ந்தார். இவ்வாறு ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்மா, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மன்னுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
                 ஐந்து சிவராத்திரி :
          🔔 மகா சிவராத்திரி :  மாசி மாதத் தேய்பிறை சதுர்த்திசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவராத்திரி" என்ற பெயரும் உண்டு.
           🔔 யோக சிவராத்திரி :  திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் - இரவு சேர்ந்த அறுபது நாழிகை (24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
            🔔 நித்திய சிவராத்திரி :   வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை - வளர்பிறைகளின் சதுர்த்திசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி.
            🔔 பட்ச சிவராத்திரி :  தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினாலாம் நாளான சதுர்த்திசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
            🔔 மாத சிவராத்திரி :   பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்திசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும்.
         அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்

விநாயகர் சதுர்த்தி விரதம்!!


            விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விநாயகர் சதுர்த்தி விரதம். விக்ன விநாயரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் பெறலாம். விரதத்தால் பலன் பெற்றோர் :
          🌞 பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈஸ்வரனைக் கணவராக அடைந்தார். தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
          🌞 ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர். சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
           விரதமிருக்கும் முறை :
             🌟 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
              🌟 சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்த வித தடைகளும் இல்லாமல் அருள் புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
            🌟 நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.
           🌟 காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
          🌟 இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடை பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.
           🌟 பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் செய்யலாம்.
           🌟 விநாயகரை வேண்டி விருதமிருந்தால் பிள்ளை விநாயகர் வேண்டுதலை நடத்திக் கொடுப்பார்.
          அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

பிள்ளை'யார்'என்பது ஏன்?

          பிள்ளை'யார்" என்பது ஏன்?
            🌀 கணபதி, கணேஷன், மூம்மூர்த்தி என்று பல பெயரில் அழைக்கப்படும் விநாயகருக்கு பிள்ளையார் என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
            🌀 பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை 'யார்" என்ற மரியாதைச் சொல் சேர்த்து அழைக்கிறோம்.
            🌀 தந்தையை 'தந்தையார்" என்றும், தாயை 'தாயார்" என்றும், தமையனை 'தமையனார்" என்றும், அண்ணியை 'அண்ணியார்" என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை 'பிள்ளையார்" என்று அழைப்பதில்லை.
            🌀 அந்த மரியாதை, விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. காரணம் அவர் பார்வதி, பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை மட்டுமல்ல.
           🌀 சிவன் பார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்பதாலும் தனக்கு மேல் கருணை, பலம், புத்திக்கூர்மை, காரியசக்தி, அன்புள்ளம் கொண்டவர் எவருமில்லை என்று தனது அருளின் மூலம் நிரூபித்த காரணத்தால், 'பிள்ளையார்" என பெருமையுடன் போற்றப்படுகிறார்.
           🌀 அனைவர் வீட்டு பிள்ளையாக கருதும் பிள்ளையாரின் மீது அன்பு வைத்த அனைவருக்கும் அவர் எப்போதும் அருளாசி வழங்குவார்.
            அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.