ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

விநாயகர் சதுர்த்தி விரதம்!!


            விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விநாயகர் சதுர்த்தி விரதம். விக்ன விநாயரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் பெறலாம். விரதத்தால் பலன் பெற்றோர் :
          🌞 பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈஸ்வரனைக் கணவராக அடைந்தார். தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
          🌞 ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர். சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
           விரதமிருக்கும் முறை :
             🌟 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
              🌟 சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்த வித தடைகளும் இல்லாமல் அருள் புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
            🌟 நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.
           🌟 காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
          🌟 இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடை பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.
           🌟 பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் செய்யலாம்.
           🌟 விநாயகரை வேண்டி விருதமிருந்தால் பிள்ளை விநாயகர் வேண்டுதலை நடத்திக் கொடுப்பார்.
          அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக