ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சிவராத்திரி அறிவோம்!!


             சிவராத்திரி என்பதற்கு 'சிவனுக்கு உகந்த இரவு" என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்திசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
              புராணக் கதை :
            பிராமவுக்கும் விஷ்ணுவுக்கும் போர் உண்டான போது இருவருக்கும் ஓர் போட்டி வைத்தார் ஈசன். யார் முதலில் தன் திருமுடியையும் பாதத்தையும் பார்க்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர் என்று ஈசன் கூறினார். அதில் திருவடியை பிரம்மன் பார்த்ததாக போய் சொன்னாதல் ஈசன் கோபமுற்று அண்ணாமலையில் ஜோதி பிழம்பாய் அமர்ந்தார். இவ்வாறு ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்மா, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மன்னுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
                 ஐந்து சிவராத்திரி :
          🔔 மகா சிவராத்திரி :  மாசி மாதத் தேய்பிறை சதுர்த்திசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவராத்திரி" என்ற பெயரும் உண்டு.
           🔔 யோக சிவராத்திரி :  திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் - இரவு சேர்ந்த அறுபது நாழிகை (24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
            🔔 நித்திய சிவராத்திரி :   வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை - வளர்பிறைகளின் சதுர்த்திசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி.
            🔔 பட்ச சிவராத்திரி :  தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினாலாம் நாளான சதுர்த்திசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
            🔔 மாத சிவராத்திரி :   பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்திசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும்.
         அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக