திங்கள், 28 நவம்பர், 2016

மனுமுறைக் கண்ட வாசகம்

       திரு அருட் பிரகாச வள்ளளார் நமது  பிறப்புக்கு காரனமாவதை பட்டியலிடுகிறார்.
       நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனே!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனே!
       தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனே!
கலந்த சினேகரைக் கலகம் செய்தேனே!
       மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனே!
குடிவரி யுயர்த்தி கொள்ளை கொண்டேனே!
       ஏழைகள் வயிறு எரியச் செய்தேனே!
தருமம் பாராது தண்டம் செய்தேனே!
       மண்ணேரம் பேசி வாழ்வழித்தேனே!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனே!
       களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனே!
பொருளை இச்சித்து பொய் சொன்னேனே!
        ஆசைகாட்டி மோசம் செய்தேனே!
வரவுபோக்கொழிய வழியடைத்தேனே!
       வேலையிட்டி கூலி குறைத்தேனே!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனே!
        இரப்போர்க்கு பிச்சை இல்லையென்றேனே!
கோள் சொல்லி குடும்பங் கலைத்தேனே!
       நட்டாற்றில் கையை நழுவ விட்டேனே!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனே!
        கற்பழித்தவரைக் கலந்திருந்தேனே!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனே!
       கணவன் வழிநிற்போறைக் கற்பழித்தேனே!
கருப்பமழித்து களித்திருந்தேனே!
        குருவை வணங்கக் கூசிநின்றேனே!
குருவின் கானிக்கை கொடுக்க மறந்தேனே!
       கற்றவர் தம்மை கடுகடுத்தேனே!
பெரியோர்பாட்டிற் பிழை சொன்னேனே!
       பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனே!
கன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேனே!
        ஊன்களை உண்டு உடலை வளர்த்தேனே!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனே!
        அன்புடையவர்க்கு துன்பஞ்செய்தேனே!
        இவ்வாறு வள்ளார் சுவாமிகள் தன்பிறப்புக்கும் வாழ்கைக்கும் இதெல்லாம் காரணமானதோ என்றோ என்று மனம் உருகுகின்றார் இறைவனிடம்.
         மேலே உள்ள கலக்கத்தில் சிக்காத மனிதன் உண்டு என்றால் அதுவும் வள்ளளாரே பிறகு ஏன் இந்த பாடல்.இந்த பாவங்கள் நம்பிறப்புக்கு காரணம் ஆகும் ஆகவே அதை நீக்க வேண்டும் என்கிறார்.வள்ளளாரின் பாதம் போற்றி நாமும் நாமும் வாழ்வோம்.அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை!அருட்பெரும் ஜோதி.
     அன்புன் ஆத்மா த.சிவகிரி  . ஓம் சிவார்ப்பனம்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

பஞ்சமி திதி நாள்- ஸ்ரீ வராஹி வழிபாடு

              🌟 வாழ்வளிக்கும் ஸ்ரீவாராஹி தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்த மாதர்களின் மகிமையை தேவி மஹாத்மியம் முதலான ஞான நூல்கள் விரிவாக விளக்குகின்றன.
           மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது தேவிமஹாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் 'சப்த ஸதீ" என்று போற்றப்படுகிறது.
             🌟 இந்த நு}ல், அசுரர்களாகிய சும்ப - நிசும்பர்களை அழிக்க ஆதி சக்திக்கு உதவியாக அவதரித்தவர்கள் சப்தமாதர்கள் என்று விவரிக்கிறது. இவர்களில் வாராஹி தேவியை வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இவளை வழிபடுவார்கள்.
        வழிபட உகந்த நாட்கள் :
           பஞ்சமி திதி நாட்கள். அர்ச்சனைப் பொருட்கள் : குங்குமம், செந்நிறப் பூக்கள்.
    புண்ணிய நூல் : வாராஹிமாலை
                      நிவேதனம் :
        🌟 தோல் நீக்காத பூண்டு கலந்த உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன். சிறப்பு வழிபாடு :
             🌟 பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீவாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், நிவேதனமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பதார்த்தங்களை நிவேதனம் செய்து, வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.
        🌟 மேலும் அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றி கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் அருள்வாள். வழிபாட்டு மந்திரங்கள், வாராஹி மாலையில் ஒரு பாடல்...
          இருகுழை கோமளம் தாள்புட்ப ராகம்
       இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை
       கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக்கனிவாய் பவளம்
       சிறந்த வல்லி மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!
      🌟 பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் இந்தப் பாடலையும் பாடி மனமுருகி வாராஹிதேவியை வழிபட, நமக்கு துணை நிற்பாள். அஸ்வினி, பரணி, மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.
      அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

வியாழன், 17 நவம்பர், 2016

முருகபெருமானின் ஆறு முகம் அறிந்து கொல்வோம்.

முருகனின் ஆறு முகங்கள் என்ன தெரியுமா?
        🌟 “வேலனை வணங்குவதே நமது முதல் வேலை” என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன். தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். இதனை “முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்” என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.
         🌟 இப்படி பல சிறப்புகளைக் கொண்ட முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளது. அந்த ஆறுமுகங்கள் என்ன என்று இங்கு பார்ப்போம்.
         🌀 ஒரு முகம், பூங்கொடி போன்ற இடையைக் கொண்டு குறத்தி வள்ளியுடன் புன்னகையோடு நமக்குக் காட்சி தரும் முகம்.
        🌀 குற்றம் இல்லாமல் திகழ்வதற்காகப் பல கதிர்களை விரித்து வெளிச்சம் தரும் முகம் தான் இரண்டாவது முகம்.
       🌀 முருகனைச் சுற்றி நின்ற படி அவரை புகழ்ந்து பாடுபவர்களைப் பார்த்து இனிமையாகச் சிரித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் தரும் முகம் தான் இந்த மூன்றாவது முகம்.
       🌀 அந்தணர்கள் சிரத்தையாக அமர்ந்து வேதங்களை முழங்கி பல யாகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்கிறது முருகனின் நான்காவது முகம்.
       🌀 முருகனின் முகத்தை நாம் சூரியனாகவோ அல்லது சந்திரனகவோ காணப்படும் முகம் தான் ஐந்தாவது முகம்.
      🌀 உலகத்தில் எல்லாம் நல்லதாக நடந்துகொண்டிருக்கும் போது, நடுவே சில தீய சக்திகளும் திகழும். அப்போது தீய சக்திகளோடு போர் செய்து வெல்லும், அது மட்டுமல்லாமல் நமக்கு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் முகம் தான் ஆறாவது முகம்.
           அன்புன் ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.