திரு அருட் பிரகாச வள்ளளார் நமது பிறப்புக்கு காரனமாவதை பட்டியலிடுகிறார்.
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனே!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனே!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனே!
கலந்த சினேகரைக் கலகம் செய்தேனே!
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனே!
குடிவரி யுயர்த்தி கொள்ளை கொண்டேனே!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனே!
தருமம் பாராது தண்டம் செய்தேனே!
மண்ணேரம் பேசி வாழ்வழித்தேனே!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனே!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனே!
பொருளை இச்சித்து பொய் சொன்னேனே!
ஆசைகாட்டி மோசம் செய்தேனே!
வரவுபோக்கொழிய வழியடைத்தேனே!
வேலையிட்டி கூலி குறைத்தேனே!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனே!
இரப்போர்க்கு பிச்சை இல்லையென்றேனே!
கோள் சொல்லி குடும்பங் கலைத்தேனே!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனே!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனே!
கற்பழித்தவரைக் கலந்திருந்தேனே!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனே!
கணவன் வழிநிற்போறைக் கற்பழித்தேனே!
கருப்பமழித்து களித்திருந்தேனே!
குருவை வணங்கக் கூசிநின்றேனே!
குருவின் கானிக்கை கொடுக்க மறந்தேனே!
கற்றவர் தம்மை கடுகடுத்தேனே!
பெரியோர்பாட்டிற் பிழை சொன்னேனே!
பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனே!
கன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேனே!
ஊன்களை உண்டு உடலை வளர்த்தேனே!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனே!
அன்புடையவர்க்கு துன்பஞ்செய்தேனே!
இவ்வாறு வள்ளார் சுவாமிகள் தன்பிறப்புக்கும் வாழ்கைக்கும் இதெல்லாம் காரணமானதோ என்றோ என்று மனம் உருகுகின்றார் இறைவனிடம்.
மேலே உள்ள கலக்கத்தில் சிக்காத மனிதன் உண்டு என்றால் அதுவும் வள்ளளாரே பிறகு ஏன் இந்த பாடல்.இந்த பாவங்கள் நம்பிறப்புக்கு காரணம் ஆகும் ஆகவே அதை நீக்க வேண்டும் என்கிறார்.வள்ளளாரின் பாதம் போற்றி நாமும் நாமும் வாழ்வோம்.அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை!அருட்பெரும் ஜோதி.
அன்புன் ஆத்மா த.சிவகிரி . ஓம் சிவார்ப்பனம்.
திங்கள், 28 நவம்பர், 2016
மனுமுறைக் கண்ட வாசகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக