வியாழன், 15 டிசம்பர், 2016

ஓம் என்றால் என்ன.

            ஓம் என்பதன் விளக்கம் .
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
       👉 ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து
வைத்துள்ள ஒரு பெயராகும்.
            👉 ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்மூர்த்திகளை படைத்த பராசக்தி ஓம் காரத்தில் இருந்து தோன்றினால் என்று வரலாறு கூறுகிறது. மேலும் பிரம்மா ஒம் காரத்தை வைத்து தான் உலக ஜீவன்களை படைக்கிறார் ஓம் என்பதற்க்கு பிரணவம் என்று பொருள், பிரணவம் என்றால் முடிவில்லாதது என்று கூறுவார்கள்.
          👉 இந்த ஓம் என்பதை வைத்து தான் மந்திரம் தொடங்கப்படுகிறது ஏனென்றால் இதுதான் பிரபஞ்சத்தின் சாவி இதை உச்சரித்து கூறும்போது அந்த சொல் வலிமை அடைகிறது.
          👉 ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹhபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க ஓம் என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது. ஓம்-ன் பொருள் :
         👉 ஓம் என்பதை பிரித்தால் அ காரம் உ காரம் ம காரம்
         👉 அ காரம் என்பது சிவம் : வலதுகண் சூரியன்
         👉 உ காரம் என்பது சக்தி (பார்வதி) : இடதுகண் சந்திரன்
         👉 ம் காரம் என்பது இரண்டும் சேர்ந்தது : புருவமத்தி சுழுமுனை மற்றொரு பொருள் : அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது. இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து.
         மேலும் அ என்பது இறைவனையும், உ என்பது உலக உயிர்களையும், ம் என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த அ, உ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த ம் என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது. மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும்.
   அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக