செவ்வாய், 17 நவம்பர், 2015

நான் ஆத்மா

அறிவை இடைவிடாமல் கையாள்வதால் அறியாமை அகல்கிறது. விவேகத்தை விடாமல் கையால்வதற்கு யோகவழிகள் உண்டு,
நான் ஆத்மா
நான் அந்தகரணங்கள் அல்ல
நான் உடல் இல்லை
நான் ஐம்பெரும் கோசங்கள் இல்லை
நான் பிரம்மமாக இருக்கிறேன்
(அஹம் பிரஹ்மாஸ்மி)
ஓங்காரத்தில் இருந்து தான் அந்த ஓங்கார வடிவம் (உ)போன்ற அமைப்பு உடையது.
குணமானது விளக்கம் உடையதாகவும் விளங்கப்படாததாகவும், வடிவம் உள்ளதாகவும் இல்லாததாகவும் உள்ளது.
      (1) குணம் என்பது முக்குணமே ஆகும். இயல்பு, தன்மை,நிறம் என்பது கூடக் குணம் என்று பேசப்படும். சுவைகள் யாவும் சத்துவ- ராஜஸ - தாமஸ குணங்களின் விரிவே ஆகும்.
      (2) யோக மார்க்கமும் இந்தியாவின் பல்வேறு சமயங்களும் சாக்கிய கொல்கையை ஓரளவு அல்லது முழுவது‌ம் ஏற்றுக் கொண்டே இருக்கின்றன, ஆகவே அதை அறிவோம்.
      (3) அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்' என்ற கருத்தோடு சாங்கிய நூல் கூறுவன எல்லாம் தன் உடலால் உணரக் கூடியனவேயாம். அதனால் பல சமயங்களும் இக்கொள்கையை இந்தியாவில் ஏற்றுள்ளன.
       (4) பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவை (சமஷ்டி) தொகுதி என்றும், எல்லா உயிர்களுக்கும் தனித்தனியாக உள்ள அதே பொருள் (வியஷ்டி) விகுதி என்று கூறப்படும்.
       (5) புருஷன்          மூலப்பகுதி
    (பரமாத்மா)      (மூலப்பிரக்கிருதி)
                                ஆத்மா முக்குணக்கலப்பு
                                (அவ்யக்தம் வெளிப்படாதது )
                                முக்குணப் பிரிப்பு
                                (வியந்தம் வெளிப்படுவது)
                                 அகங்காரம்
                                 மஹத் (புத்தி)
                                 (சித்தம்) மனம்
                                 தன்மாத்திரைகள்
                                இந்திரியங்கள்
                                 பஞ்சபூதங்கள்
                                 உடல்
                                  பிரபஞ்சம்
இப்படி ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதை இது காட்டுகிறது.
      (6) கடவுள் தன்மையுடைய பிரம்மம் -புருஷன் -ஆத்மா என்று தனித்தனியே உள்ளன. இவற்றைச் சில சமயங்கள் சுத்தப்பகுதி என்று கூறும்.
        (7) கடவுளுடன் ஓரளவு தொடர்பு மட்டுமே கொண்டுள்ள இப்பகுதி மூலப் பிரகிருதி முதல் அண்டம் பிண்டம் வரை விரிந்த பகுதியாகும்.
       (8) இவையெல்லாம் மனத்தால் உணரக்குடியவை; மேலும் (சமஷ்டி) தொகுதி (வியஷ்டி)  விகுதியாக உள்ளவை. அகங்காரம் எல்லாக் குணங்களோடும் கலந்தது போல் யாவற்றுக்கும் பொதுவாக உள்ள அகங்காரம் என்பது (சமஷ்டி)  தொகுதியாம் ; இதன் அணு அளவு உயிர்கள் ஒவ்வொன்றிலும் இருப்பது (வியஷ்டி) விகுதியாம்.
         (9) மஹத் அதாவது புத்தி -புத்தி என்பது பிரபஞ்சம் தழுவியதாகையால் மஹத் (பெரியது) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபஞ்சம் உண்டாகவும் அது காக்கப்படவும் அழிக்கப்படவும் பயன்படும் புத்தி சமஷ்டி மஹத் என்றும் உயிர்களுக்கு இதில் அணு அளவாகப் தரப்பட்டது வியஷ்டி என்றும் கூறப்படும்.
பிரபஞ்சத்தை அறிவினால்தான் படைத்திருக்க முடியும். ஏன் என்றால் பிரபஞ்சப் பொருள்களின் அமைப்பில் மாபெரும் அறிவு அடங்கித் தொழில்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே வடிவமற்ற அறிவு வடிவமுள்ள பிரபஞ்சத்தையும் உடல்களையும் உண்டாக்கி இருக்கிறது.
         இதே பிரபஞ்சம் முழுவதையும் யோகம் செய்பவன் தன் அறிவின் எல்லைக்குள் மனம் சித்தம் என்ற பகுதிகளுக்குள் அடக்க முடியும். ஆகையால் வடிவமுள்ள பிரபஞ்சம் வடிவமற்ற புத்திக்குள் அடங்குகிறது.
        இதனாலேயே எந்த புத்தி படைப்புத் தொழிலைச் செய்ததோ அதே புத்தியின் அணு அளவு நம்மிடம் இருப்பதால் தான் விரிவான பிரபஞ்சத்தை அதற்குள் அடக்க முடிகிறது.
        ஒரு துளி பணிக்குள் ஒரு பெரிய வானமும் இயற்கைக் காட்சிகளும் அடக்கமாகத் தெரிவது போன்றது இது.
         கடவுளை ஒத்துக் கொள்ளாதவர்கள் இந்த படைப்பு இயற்கையாக நிகழ்ந்தது அதை ஆராயும் போது அறிவு நமக்கு உண்டாவதாகவும் கூறுவர். அதாவது வடிவத்தில் இருந்து வடிவமற்ற அறிவு வருவதாக கூறுவர்.
        (10) சாங்கியத்தின் படி புத்தியும், ஜடமான ஒரு கல்லும், மண்ணும் ஒரு பொருளாகவே கருதப்படுகிறது. அதனால் தான் ஜடப்பொருள்களால் சூழப்பட்ட பிரபஞ்சம் சுருட்டப்பட்டு நம் உள் மனத்தில் வைக்கப்படுகிறது.
         (11) எல்லாம் சூக்கும நிலையில் இருந்து தூல நிலைக்கு வருவதையும் சூக்கும தியானத்தால் நாமே உணர முடியும்.
          (12) புருஷன் எனப்படுவது அழிவற்றது, எதனாலும் உண்டாக்கப் படாதது, அமிர்த வடிவானது, தூயது. இதன் அணுத்தன்மையே நம் ஆன்மாவாகும். (சீவாத்மா)
          (13) எல்லாப் பொருள்களிலும் முக்குணம் பரவி இருப்பதைச் சாங்கியம் கூறுகிறது.
          (14) சாங்கியத்தின் இக்கொள்கை எல்லாச் சமயங்களுக்கும் பொது. ஆகவே அதை உணர்ந்தால் தான் யோக முயற்சி சிறப்பாக வளரும்.
          (15) தான் கடவுளின் ஒரு பகுதி என்றும் பிரபஞ்சம் முதல் உடல் வரை தனக்கு அந்நியம் என்றும் உணரும் போது தானாகவே சமாதி நிலை உண்டாகும்.
           இதை உணர இதைவிடச் சிறந்த தத்துவக் கொள்கை இல்லை. இவை என்னிக்கையால் 24 ஆகு‌ம்.
             தன்மாத்திரைகள்
             (நுண் பூதங்கள்)____5
             பஞ்சபூதங்கள்
             (பருவடிவம்) _______5
              ஞானேந்திரியம்___5
              கர்மேந்திரியம் ____5
             அந்தக்கரணம் _____4

   மொத்த தத்துவங்கள்     24 
                           தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக