சனி, 28 மே, 2016

ஓரறிவு முதல் ஆறறிவு வரை

மனிதன் விலங்குகளிடம் இருந்து மாறுபட்ட நிலைதான் ஆறாம் அறிவு.
விலங்கு நிலை.மனித நிலை.தெய்வநிலை என்பதை விங்ஞானமும் மெய்ஞானமும் ஏற்க்கும் நிலையில் கூறவிரும்புகின்றேன்.விலங்கையும் மனிதனையும் பிரித்து விளங்க நினைப்பவர்கள்" மனிதன் ஆறறிவு உடையவன்.விலங்குகள் ஐந்தறிவு அல்லது அதற்கும் கீழான அறிவுடையவை"என்பார்கள்.
மனிதனுக்கு எத்தனை அறிவு? என்று கேட்டால் ஆறறிவு என்று அசத்தலாக பதில் கூறுவார்கள்.அப்படி சொல்பரிடம்"மூன்றாவது அறிவு எது என்று கேட்டால்."கப்சிப்"என்று இரண்டாவது அறிவில் கைவைத்து மூடிக்கொள்வார்கள். அதென்ன முதலாம் அறிவு இரண்டாம் அறிவு என்று குழம்ப வேண்டாம் விளக்குகின்றேன்.

           நமது பொறிகள் ஐந்து?மெய்,வாய்,மூக்கு,கண்,செவி,,,,,,சரிதானே! மெய் என்றால் உடம்பு அது தொடுஉணர்ச்சி உடையது,தூங்கும் போது உடலில் சூடு பட்டாலும் தொட்டாலும் தொடு உணர்ச்சி (Touching sense)நம்மை எழிப்பி விடும்,இது முதல் அறிவு.
              கண் திறக்காத குட்டிகள்,குழந்தைகள் வாயாலும் நாவாலும் தாயிடம் ஓர் ஆனந்தத்தோடு பார்த்திருந்தால்?அது சுவை உணர்வு.(Taste sense) வாயை அடிப்படையாக கொண்டது இரண்டாவது அறிவு.அதுவே இரண்டாவது அறிவு வாய்ச்சுவை என்பதால் கேள்வி கேட்டால் சிலர் வாயை மூடிவிடுவார்கள்.இவர்கள் இரண்டாவது அறிவை மூடியவர்கள் என்றும் கேலி பேசலாம்.

           மூன்றாவது அறிவு குழந்தைகளும் விலங்குக் குட்டிகளும் சரி கண் விழிப்பதற்க்கு முன்பே தாயை அடையாலம் கண்டுகொள்ளும் எப்படி? வாசம்தான் காரணம்,நாய்குட்டிகளும் பூனைகுட்டிகளும் தங்கள் தாயை முகர்ந்து முகர்ந்து தாயின் வாசனையை உணர்ந்துகொல்லும்.தன் தாய் மார்போடும் தோலோடும் சேர்த்து அனைக்கும் போது நிம்மதியாக இருக்கும்.காரணம் தாயின் வாசம்.குந்தைக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் தருகிறது .அதனால்தான் தாயின் புடவையில் ஊஞ்சல் (தொட்டில்) கட்டிதூங்கவைப்பார்கள்.நாசிவழியாக உணரும் மூன்றாவது அறிவு(Smell sense)நுகரும் அறிவு.

             நான்காவது அறிவுதான் கண்.அதன் பார்வைத்திறன்"வளர்ந்த குட்டிகள் கண்களால் பார்த்து அடையாலம் காணுகின்ற ஒன்றை மூலையில் பதிவு செய்கின்றன (Sight sense)காணறிவு நான்காவது அறிவு.

             ஐந்தாவது அறிவு செவி வழி உணரும் ஒலி.தொலைவில் கேட்கும் ஒலியைக்கேட்டு விலங்குகள் காதைத்திருப்பும்.நான்கு அறிவு வாய்த்த பிறகு பரிணாம நிலையில்  ஐந்தாவதாகச் செவி உணர்வு வருகிறது.

           இந்த ஐந்து அறிவு வரை விலங்கிற்கும் மனினுக்கும் பொது ஆறாவது அறிவுதான் மனிதனை விலங்கிடம் இருந்து பிறிக்கும் உயர் அறிவு.அந்த ஆறாம் தான் "மனம்"..,Mind!
               முதல் ஐந்து அறிவும் உடம்பின் தோல்,நாவை உடைய வாய்,மணம் நுகரும் நாசி,பார்வை உடைய கண்,ஒலி கேட்கும் காது என்கிற ஐந்து கருவிகளின் துளை வழியே வெளியிருப்பதை உள்ளே செலுத்தும்,உள்ளிருந்து அதை வாங்கி ஐந்திலும் பொருந்தி நின்று அதனை ஆய்ந்து முடிவுகட்டும் மனம் என்கி்ற ஆறாவது அறிவே மனித நிலை,மனிதன் உயர்திணை விலங்கு.

             அந்த ஆறாவதையும் கடந்து ஏழாவது நிலை எய்தினால் அதுவே தெய்வ நிலை.இந்த ஆறு அறிவைப்பற்றி அறிந்து சொன்னவன் யார்?நோபல் பரிசு பெற்ற மேல்நாட்டுக்காரன் என்று தேடிநாள் தோற்றுப்போவீர்கள்.இதைக்கண்டு சொன்ன பேறறிஞர்.பல்லாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த முழுதமிழன் தொல்காப்பியர் தந்த தொல்காப்பியர் கீழ்கண்டவாறு கூறு வதன் மூலம் கூறுகிறார்.
       ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
        இரண்டறிவு அதுவே அதனோடு நாவே
         மூன்றறிவு அதுவே அவற்றோடு மூக்கே
          நான்கறிவு அதுவே அவற்றோடு கண்ணே
         ஐந்தறிவு அதுவே அவற்றோடு செவியே
         ஆறறிவு அதுவே அவற்றோடு மனமே
         நேரிதின் உணர்ந்தோர் நெறிபடுத்தினாரே!
           ஆக ஆறறிவுடைய மனிதனுக்கு முதல் ஐந்தறிவும் உண்டு.ஐந்தறிவுடைய உயிற்க்கும் முதல் சொன்ன நான்கறிவும் உண்டு.இப்படி உணரவேண்டும்.
          இதைவிட ஆச்சரியம்!இந்த ஐந்தறிவும் .நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம்,ஆகிய ஐம்பூதங்களோடு தொடர்புடையவை எப்படி?
         தாவரங்கள் ஓர் அறிவுடையவை.அவைகள் நிலத்தை இருகப்பற்றி வாழும்.நிலம் போலவே அதன் அசைவும் இருக்கும்.நமது தோலும் ஓரறிவுடைய ஒரு தாவரத்தன்மை உடையதே.
           தோடரும்  

3 கருத்துகள்: