திங்கள், 30 மே, 2016

ஆதாரம் ஏழுக்கும் மூலாதாரமே முதல்

ஐந்து பூதங்களாகிய நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம்,சேர்ந்து உருவான ஒன்றை பிரபஞ்சம் என்கிறோம்.பஞ்சம் என்றால் வடமொழியில் ஐந்து என்று பொருள்.'பிர' என்பது கடவுள் கருணையால் என்று உணரப்படும்.ஐந்து பூதங்கள்,கடவுள் கருணையால் சேர்ந்து உருவானது பிரபஞ்சம்.
           அதனுள்ளே இருக்கும் நாம் மெய்,வாய்,மூக்கு,கண்,செவி, என்கிற ஐந்து பொறிகள் சேர்ந்து உருவானவர்கள்.இந்த ஐந்தையும் ஆளும் மனம் ஆறாவது அறிவு.இதை உடையவர் மனிதர்.அந்த ஆறாம் அறிவையும் கடந்து .உடம்பையும் கடந்து ஏழாம் நிலையில் நிற்க்க முடியும்.அப்படி நிற்கும் நிலையே தெய்வநிலை.
           அப்படியான ஏழு என்ற எண் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.தெய்வ நியதிகள் ஏழாக வகுக்கப்பட்டு இருப்பதாலேயே கிழமைகள் ஏழு உண்டாயின.வடமொழியில் சப்த என்றால் ஏழு என்று பொருள்.தெய்வீகமானவற்றை .சப்த ரிஷிகள்,சப்த சாகரம்,சப் கன்னிகை,சப்த நாடிகள்,சப்த லோகங்கள்,சப்த கோடி மந்திரங்கள்,என்று ஏழாகவே வகுத்தனர்கள்.மனிதன் தன் புறக்கண்ணை கொண்டு கண்டறியும் வானவில்லின் நிறங்கள் ஏழு.சப்த என்ற சொல்லிற்க்கு வடமொழியில் ஒலி என்று பொருளும் உண்டு.அதனால் ஒலியை உலகில் (சரிகமபதநி) என்று.சப்த ஸ்வரங்கள் என்று.ஏழாக வகுத்தனர்.சட்சமம்,ரிஷபம்,காந்தாரம்,மத்யமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் என்று கர்நாடக சங்கீதம் ஏழாகவே பிரிகிறது.
          தமிழிசையும் குரல்,உழை,கைக்கிளை,துத்தம்,இளி,விளரி,தாரம் என்று ஏழாகவே இருக்கிறது.புராணங்கள் மேல் உலகம் ஏழு கீழ் உலகம் ஏழு என்றும்.மனிதப் பிறவி ஏழு என்கிறது.உயிர்க்குலப் படைப்பை ஆராய்ந்தவர்கள் உயிரினத்தை தாவரங்கள்.நீர்வாழ்வன.ஊர்வன.பறப்பன.விலங்குகள்.மக்கள்.தேவர் என்று ஏழாகவே வகுத்தனர்.
         நம் உடலின் ஆற்றலுக்குக் காரனமான தாதுக்கள்.நீர்,ரத்தம்,கொழுப்பு,தசை,எலும்பு,மஜ்ஜை,விந்து.என்ற ஏழு தாதுக்களாகவே அறியப்படுகிறது.
        மனித உடலில் ஜீவசக்தி நின்று இயங்கும் இடங்களை ஞானிகள், யொகிகள் ஏழாகவே வகுத்தனர்.அவை மூலாதாரம்.சுவாதிஷ்டானம்.மணிப்பூரகம்.அனாகதம்.விசுத்தி.ஆக்ஞை.சகஸ்ரம் என்று எழு சக்கரங்களை கண்டறிந்தனர்.முதுகில் உள்ள தண்டுவடத்தின் விளிம்பில் தொடங்கி மூலையின் உச்சிவரை ஏழு சக்கரங்கள் வழியாக நமது உயிர் சக்தியை ஏற்றி ஏற்றித் தெய்வநிலை பெருவதே சித்தர்கள்.யோகிகள் கண்டறிந்த தெய்வமாகும் வழி.
           உடம்பைத்தவிர வேறுசிந்தனை இல்லாத நிலை மிருக நிலை.நான் வேறு .உம்பு வேறு என்ற சிந்தனையின்றி உடம்பே நான் என்று மதி மயங்கிய நிலை மனித நிலை.உடம்பு நான் அல்ல என்று உடம்பையும் தாண்டி . நான்,என்ற எண்ணத்தை ஏழாவது நிலையிலும் .அதனைத் தாண்டி(துரியம்,துரியாதீதம்)நிருத்தும் நிலை.தெய்வநிலை.இப்போது கூட இந்தியாவில் இந்த நிலை தெய்வங்களாகா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மகான்கள்.
         இந்த ஏழையும் ஏழு பிறவிகளில் கடக்கவே மனிதப் பிறவி ஏழு முறை வாய்க்கிறது என்கிறது வேதாந்த மதம்
      ஒருமையுள்தாம் கற்ற கல்வி எழுமையும்
ஏமாப்புடைத்து.என்று திருவள்ளுவரும் ஒப்புக்கொள்கிறார்.இந்த ஏழு பிறவியிலும் கணவனும் மனைவியும் இனைந்தே முக்திபெற திருமணத்தில் கணவன் மனைவி கைகோர்த்து ஏழு அடிகள் நடக்கும் சப்த பதி என்ற சடங்கு நடத்தப்பட்டுள்ளது.ஆக இந்த ஆன்மீக ஞானம் அடைவது சுலபமா?.,,...கடினமா? வாருங்கள் மூலாதாரத்துக்கு போகலாம்.
        (அன்பு ஆத்மா த.சிவகிரி)
        ஓம் சிவார்ப்பணம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக