ஐந்தறிவு உடையது விலங்கு ஆறறிவு உடையவன் மனிதன்.ஏழாவது அறிவு பெறுதல் தெய்வநிலை.அதையும் கடந்து எட்டாவது நிலை எய்தினால் எங்கும் எல்லாமாய் இருக்கும் பரம்பொருள் நிலை.
ஆறறிவு பெருகின்ற மனிதன் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்கள் வழியாத்தான் மேலே உயரமுடியும்.அந்த ஆறு ஆதாங்கள் 1:மூலாதாரம்.2:சுவாதிஷ்டானம்.3:மணிப்பூரகம்.4:அநாகதம்.5:விசுத்தி.6:ஆக்ஞை.எனப்படும் .சகஸ்ரம் எனப்படும் துரியம் (மூளை) ஏழாவது ஆதாரம் அதையும் கடந்தால் துரியாதீதம் எனப்படும் துவாதசாந்தப் பெருவெளியில் இருக்கும் பரம்பொருள் நிலை.
மூலாதாரம் நம் உடலின் ஜலத்துவாரத்துக்கும் மலத்துவாத்துக்கும் மையத்தில் உள்ளது.இதுதான் நம்மை பூமியை நோக்கி இழுக்கும் மையப்புள்ளி இதனை ஒட்டிய பாலுனர்வு உறுப்புகள் உணர்ச்சிகள் எல்லாம் இங்கு இருந்துதான் செயல் படுகிறது இது இனப்பெருக்கத் திற்கு முக்கிய பங்காற்றும் உருப்பை சார்ந்ததால் மூலஆதாரம், எனப்பட்டது.படைப்புத் தொழிலின் ஆதாரம் இங்குதான் ஜீவசக்தி வட்டமிட்டு ஒரு பாம்பு போல் உறங்குகிறது.அந்த ஆற்றல் அங்கு மட்டுமே செயல்படும்போது.ஓர் அறிவு உயிராக மட்டுமே நாம் இருக்கிறோம்.ஓறறிவாகிய தொடு உணர்வே காமத்தின் நிலைக்கன்.ஆறறிவு மனிதனாக பிறந்து இந்த ஓறறிவு மட்டுமே உடையவராய் வாழ்ந்து செத்தவர்கள் பலர்.
நாம் பிறந்த காரணம் தெறியவில்லை ஆனால் நாமும் பிள்ளைகளை வேறு படைக்கிறோமே.இது அறிவுடைய செயலா? சிந்திக்காமலேயே பிள்ளை பெற்றுக்கொள்கிற வகையில் காமம் என்கிற வகையில் மூலாதார சக்கரம் சுழல்கிறது.அதிலிருந்து நம் எண்ணம் வெளிவர வேண்டும்.இதையே குண்டலினி மேல் எழுதல் என்பர்கள்.மூச்சுப்பயிற்ச்சி மூலம் மற்றும் மந்திர உச்சாடனம் மூலம்,அல்லது எண்ணத்தின் மூலம் குண்டலினியை மேலே எழுப்பலாம், இவை ஏதும் இன்றி இயல்பாகவே பல ஜென்ம புண்ணிய பலனாய் குண்டலினி மேல் நோக்கி பயனப்பட்ட மகான்களும் உண்டு.
மூச்சுப் பயிற்சியால் கனல் எழுப்பி குண்லினியை ஆவியாக்கினால் அது அடுத்து அடுத்து சக்கரங்களை கடந்து சிரசுக்கு மேலே வரும்.லலிதா சகஸ்ரநாமம் என்னும் மந்திரமும் இதனை நிகழ்த்தும்.அம்பிகையை மூலாதாரம் புஜ நிலயா என்கிறது லலிதா சகஸ்ர நாமம்.சிரசில் இருந்து புறப்படுகிற இடகலை,பின்கலை,சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் உம்பில் மூன்று இடங்களில் முடிச்சாக சந்தித்து பிறகு மூலாதாரத்தில் முடிகிறது.இதைத்தான் கோவில்களில் இரண்டு நாகங்கள் எதிர் எதிர் பின்னிக் கொண்டு மூன்று இடங்களிலஒன்றை ஒன்று கடந்து விளங்குகிற மாதிரி கல்வெட்டு போட்டிருப்பார்கள்.கீழிருந்து நாபியில் (தொப்புழ்) முதல் முடிச்சு பிரம்மகிரந்தி நடுவில் நெஞ்சுப்பகுதியில் விஷ்ணுகிரந்தி நெற்றிப்புருவ மத்தியில் மூன்றாம் முடிச்சு அது ருத்ரகிரந்தி.அதன் பிறகு இடது பக்கமமூலையில் ஒரு நாடியும் வலதுபக்க மூலையில் ஒரு நாடியும் முடிவடையும்.
இந்த பாலுணர்வு மையத்தில் உள்ள சக்திதான் (Sexual potency) நமக்கு எல்லாமாக பயன்படுகிறது.நமது எல்லா இயக்கங்களுக்கான சக்தி இங்கிருந்துதான் புறப்படுகிறது.பாட,ஆட,பேச,சிரிக்க,கோபப்பட தேவையா சக்திகள் இங்கிருந்துதான் செயல்படுகிறது இந்த மூலாதார சக்கரத்தில்.நம்முடைய நான் என்ற எண்ணம் சிக்கியிருந்தால் இனவிருத்தி இன்பம் மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கும்.
மூலாதாரச் சக்கரத்தில் சிக்கியிருப்பவர் அடையாளம் என்ன?
1"எப்பொழுது பார்த்தாலும் கீழ்த்தரமான பால் உணர்ச்சி விடயங்களையே பேசிக்கொண்டே இருப்பார்கள். 2"தொடுகை உணர்ச்சி அதிகம் இருக்கும்.3" பிறர் தம்மை தொடுவதையும் தாம் பிறரை தொடுவதையும் விரும்புவர்.4" படிப்பு, பரிட்சை,பணிபுரிதல், பணி, இவற்றை விட தனக்கு துணை கிடைக்காதா என்றே தேடுவார்கள்.கண்கள் அமைதியின்றி அலைபாயும் .துணைகிடைத்தால் எல்லா விடையங்களையும் விட்டு விட்டு காம நுகர்சி மட்டுமே இலட்சியமாய் இருப்பார்கள்.உலக உத்தமர் காந்தியடிகள் கூட ஆரம்பத்தில் அப்படித்தான்.இருந்ததாக அவரே சொன்னார் சொன்னபோது குண்டலினி ஆக்ஞா வந்த நிலை எனலாம். இல்லையேல் அவரால் அந்த விடயம் பேச முடியாது!
இன்றைக்கு திரைபடங்களில் வரும் இரட்டை அர்த்தமுடைய வசனம் தொப்புழில் பம்பரம் விடுவது ஆம்லெட் போடுவது போன்ற வேலைகளைக் கூட .சுவாதிட்டானத்தில் இருந்து மூலாதாரம் வரை சினிமாவில் செய்வதை .விழுந்து விழுந்து ரசிக்கிறோம் என்றால் குண்டலினி மூலாதாரத்தில் தங்கி விட்டது என்று பொருள்.
நாட்டியம் நடக்கிறது என்றால் நாட்டியத்தை ரசித்தால் அனாகதத்தில் குண்டலினி இருக்கிறது என்று பொருள். நாட்டியம் ஆடும் பெண்ணின் இடை,மார்பு, கால்,இதழ் என்று (Closeup shot) வைத்து கேமரா மனத்தால் ரசித்தால் குண்டலினி மூலாதாரத்தில் தேங்கி இருக்கிறது என்று அர்த்தம்.
பேருந்தில் பயண நெரிசலில் தனக்கு இம்மி அளவும் சம்மந்தம் இல்லாத இன்னொரு உடம்பை தொடத்தவிக்கிற சென்மங்கள் தொடு உணர்ச்சியால் வாழும் ஓரறிவு உயிர்களே.பள்ளியில் பயிலும் மாணவியின் பரிட்சை பேபப்பரைக் கூட தனக்கு அவளை பணியவைக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும் குரூரமான ஆசிரியர்கள் ஆறறிவு மனிதனா?அல்லர் ஓரறிவு உயிரே.மூலாதாரத்தில் குண்டலினி மண்டி விட்டது....என் செய்ய?
இதை படிக்கும் நீங்கள் ஆப்படியானால் காமம் இல்லாமல் இரு என்கிறாயா?என்கிறீர்களா?
காமம் இல்லாமல் யார் இருந்தார்கள்?இனி யார் இருக்கப் போகிறார்கள் காமத்தில் இருந்து வெளியேர என்ன முயற்ச்சி செய்தீர்கள் என்றுதான் கேட்கிறேன்?
என்ன செய்ய வேண்டும் என்கிறீரா? சொல்கிறேன்.
புத்தரிடம் சன்யாசம் பெற்றுத் துறவியானான் ஓர் அரசன் .துறவு விதிப்படி பிச்சை எடுத்து உண்ண அந்த நகரத்துக்கு அரசனை அனுப்பினார் புத்தர் .பிச்சை எடுக்க வேண்டிய வீட்டையும் காட்டித்திரும்பினார் புத்தர்.
பிச்சை முடிந்து திரும்பிய சீடன் கலவரத்துன்"புத்தரிடம் இனி அந்த வீட்டுக்கு பிச்சை எடுக்க போக மாட்டேன்"என்றார் "என்ன நடந்தது "என்றார் புத்தர்.
அந்த வீட்டு வாசலில் நிற்கும் போது எனக்கு பிடித்த உவுகளைப் பற்றிய எண்ணம் வந்தது .ஒரே ஆச்சரியம் அந்த வீட்டில் அதே உணவுகளே பரிமாறப் பட்டது.தற்செயலாக நடந்தது என்று எண்ணிணேன் அரசனாக இருந்த போது உணவு உண்டதும் தூங்குவது வழக்கம்.இப்போது யார் நம்மை அப்படி சொல்வார்கள் என்று எண்ணிணேன்."சுவாமி படுத்து ஓய்வெடுத்து செல்லலாமே"என்றால் அந்த பெண் பகீர் என்றானாது.கொஞ்ச நேரத்தில் நேற்று வரை சொந்த கூரையில்,சொந்த நிழலில்,சொந்த படுக்கையில் இருந்தோம் இன்றோ படுக்கை வேறொருவருடையது என்று என்னினேன்.உடனே அந்த பெண்"சுவாமி படுக்கை உங்களுடையதும் அல்ல என்னுடையதும் அல்ல! இது யாருடைய உடமையும் அல்ல என்றால்.என்கருத்துக்கள் உணக்கு எட்டுகின்றனவா என்றேன்."தியானம் செய்து செய்து மனம் சூன்யம் ஆகிவிட்டது என்றால்.நான் நடுங்கிப்போனேன்.அந்தப்பெண்ணைப்பற்றிய விகார எண்ணங்கள் அவ்வப்போது வந்து வந்து போயின.அவற்றையும் அவள் அறிந்து இறுப்பாளே என்று நடுங்கிப்போனேன்.எனவே நாளைமுதல் அவள் வீட்டுக்கு பிச்சைக்கு போகமுடியாது"என்றார்.
"அங்குதான் செல்ல வேண்டும்.உண்சாதனையின் முதல் பகுதி அதுதான்' 'என்றார் புத்தர். மறுநாள் முழு விழிப்போடு சென்றார் துறவி.புத்தரின் யொசனைப்படி தான் செய்கின்ற வேலையை வேறுஒருவன் போல் தானே கண்காணித்தார்.தனது மூச்சுக் காற்று கூட அவருக்கு தெறிந்தது.தாம் உணவு அருந்து வதைக்கூட வேறொறுவர் போல் அவரே அவரை கவனித்தார் .செயல் புரிபவரும் அவர் சாட்சியும் அவர்.ஆனால் செயல்புரிபவன் தான் அல்ல:பார்த்துக் கொண்டிருப்பவனே தான் என்ற விழிப்பு ஏற்ப்பட்டது.ஒருவன் கர்த்தா, மற்றவன் திருஷ்டா,கர்த்தா தான் அல்ல,திருஷ்டா (காண்பவான்) மட்டுமே தான் என உணர்ந்தார்.ஆனந்தம் பொங்கியது.
இப்படி நம்முடைய செயல்களை நாமே கவனிப்பவனாகி விட்டால் குண்டலினி மூலாதாரத்தில் இருந்து புறப்பட்டு விடும்.இதுவே தியான சாதனையின் முதற்படி.அடுத்த படியான சுவாதிட்டானம் போகலாம் வாங்க!
( தொடர் இரண்டாம் பாகத்தில் காணலாம்.)
அன்பு ஆத்மா த.சிவகிரி .ஓம் சிவார்ப்பணம்!!!!!
ஞாயிறு, 5 ஜூன், 2016
முதல் ஆதாரம் மூலாதாரம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக