திங்கள், 27 ஜூன், 2016

வலம்புரி சங்கு அறிவோமா!!

            வலம்புரி சங்கின் மகிமைகள்   வலம்புரி சங்கானது விஷ்ணு பாகவானின் கையில் உள்ள ஆயுதம். சங்கானது கோயில்களில் பூஜை செய்யும் போது ஊதுவார்கள். இது தவிர புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் விரத தினத்தன்று தங்கள் வீட்டில் வைத்து ஊதி பூஜை செய்வார்கள். அது மட்டுமல்லாமல் அதிக சக்தி கொண்டது இந்த வலம்புரி சங்கு. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
        தோஷம் நீக்கும் வலம்புரி சங்கு :
            ❄ ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியன நீங்க வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்க்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் அந்த தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.
           ❄ இந்த வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்.
             ❄ ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்கும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்தபின் அதனால் மங்கள ஸ்நானம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும்.
          ❄ செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சங்கிற்கு பூஜை செய்யலாம். ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும். இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.
            ❄ அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும். சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும்.
          ❄ புதுமனை செல்பவர்கள் சிறப்பாய் வாழ்ந்திட, கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன்கள், கல்வியில் கவனமின்மை, தொழில் கூடங்களில் தொய்வு, எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்க வல்லது வலம்புரிச் சங்கு. வாஸ்து குறைகள் முற்றிலும் நீங்க, நினைத்த காரியம் வெற்றி உண்டாக, ஆவி பிரச்னைகள் தீர வலம்புரிச் சங்கு வழிபாடு உதவும். மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது.
(அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக