புதன், 8 ஜூன், 2016

திருநீரும் அணியும் முறையும்.

                        கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்சகர் நமக்கு விபூதியும் குங்குமமும் அளிப்பார். அப்படி அளிக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.          

               விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது அதீத நன்மைகளும் ஏற்படும். ஆகவே, விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள வரிகளில் உள்ள முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து இட்டுக்கொள்ள வேண்டும்.

                    வலது கையில் வாங்கிய விபூதியை ஒரு போதும் இடது கையில் கொட்டக் கூடாது. வலது கையில் விபூதியை வைத்துக் கொண்டு தான் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். 

             ஒரு போதும் எந்த விதமான செய்தித்தாள்களிலும்.விபூதியை மடித்துக் கொள்ளக் கூடாது. செய்தித்தாளில் என்ன எழுதி உள்ளதோ அதன் படி தீய எண்ணங்கள் வரும். ஆகையால் வெள்ளை நிற காகிதத்தில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை எழுதி அதனில் விபூதியை வைத்துக் கொள்வது நல்லது. 

           விபூதியை நெற்றியிலிடுவதின் பலன்கள்: 

             கட்டை விரல்: 

       கட்டை விரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் தீராத வியாதி வரும். 

       ஆள் காட்டி விரல்: 

            ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் - பொருட்கள் நாசம் உண்டாகும். 

           நடுவிரல்: 

         நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் நிம்மதியின்மை ஏற்படும். 

           மோதிர விரல்: 

             மோதிர விரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். 

             சுண்டு விரல் 

         சுண்டு விரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் கிரகதோஷம் எற்படும். மோதிர விரல் - கட்டை விரல்: மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். 

           விபூதியை குழைத்து இடுவதற்கு வலது கரத்தில் கொஞ்சம் விபூதியை எடுத்துக்கொண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து இடது கை விரல்களால் குழைத்து பின்னர் வலது கை ஆள்காட்டிவிரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல்களால் நெற்றியிலும் இரண்டுகரங்கள், தோள்பட்டை முதுகு வயிறு போன்ற இடங்களில் இட்டுக்கொள்ளவேண்டும். 

             இடதுகை விரல்களினால் வலது கரத்தின் மணிக்கட்டு, முழங்கை புஜம் போன்ற இடங்களில் இட்டுக்கொள்ளலாம். திருநீரு மகாமந்திரத்துக்கு இனையானது.மகாமருந்துக்கும் இனையானது.இதனை ஞாணசம்பந்த சுவாமிகளின் மந்திமாவதுநீரு.என்னும் பாடல் மூலம் கானமுடிகிறது.இப்படி பட்ட திருநீர் பசுஞ்சாணம் வில்வபழம் வில்வஇலை கொண்டே தயாரிக்கப்பட வேண்டும் ஆனால் இன்று ரசாயணம் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்க்கப்படுவது வேதனையாக உள்ளது.திருநீற்ரின் பெருமைமையை வள்ளளார் சுவாமிகள் புண்ணிய விளக்கம் என்ற பதிணோரு பாடல்களின் வாயிலாக விளக்குகிறார் .
        பாடல்
       பாடற்க்கு இனிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்,
ஆடற்கு இனிய நெஞ்சே, நீ, அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடுநீறே.
        நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அறிய நுண்மைதனைத்
தூயவிடை மேல் வரும் நமதுச் சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆயவினையால் நெஞ்சே, நீ, அஞ்சேல் என் மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நம என்று இடு நீறே.
  
       நல்லதிருநீரு தந்தால் நல்லது.அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக