சனி, 11 ஜூன், 2016

சட்டை முனி

           போக முனிவர்  தம்முடைய போகர் 7000. சந்த காண்டத்தில் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர் சட்டைமுனி என்றும். ஆவணி மாதம் மமிருகசீரிடம் மூண்றாம் பாதத்தில் பிறந்தவர் சிங்கள தேசத்து தேவதாசிக்கு மகனாக பிறந்து பின்னர் அந்த தேவதாசி தன்கணவன் பிள்ளைகளோடு புலம்பெயர்ந்து தமிழகம் வந்து விவசாய கூலியாக வாழ்ந்தனர் .என்று கூறுகின்றார்.          
              அகத்தியர் 1200  இல் சட்டைமுனியின் தாய் தந்தையர்  வேளான் குடியில் பிந்தவர் என்றும்.அகத்தியர் தம்அமுதகலை என்னும் நூலில்.
        கருதினான் சட்டைமுனி அனந்தம் கோடி
  கருவாக அவன் குலந்தான் சேனியனாகும்.
  என்றுகூறியுள்ளார். சட்டைமுனி என்றழைக்கப்படும் சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார். இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் அவதரித்தார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய், தந்தையர்க்கு உதவி வந்தார். வரலாறு :  ஒரு நாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு அணிந்த ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ, ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.  இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.இவர் ஊர், ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன.  இவர் ஏமாற்றத்துடன் கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. மேளதாலங்கள் முழங்க அரங்கனின் அருகிள் அமர்ந்து இருந்தார் மேலசத்தம் கேட்டு ஊர்மக்கள் வந்து பார்த்தபோது அரங்கன் அருகில் இருக்கும் சட்டைமுனியை கள்வன் எனக்கருதி மன்னனிம் அழைத்து சென்றனர் மன்னன்விசாரித்தபோது எனக்கு ஒன்றும் தெரியாது எல்லாம் அரங்கனுக்கே தெரியும் என்றார் .
சட்டைமுனியை மீண்டும் கோவிலுக்கு கொண்டு  வந்தபோதும் அவர்அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன.  இவர் “அரங்கா!”
திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சட்டைமுனி சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 14 நாள்கள் ஆகும். (அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பணம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக