சனி, 28 மே, 2016

ஓரறிவு முதல் ஆறறிவு வரை (பாகம் இரண்டு)


 
          பஞ்சபூதங்களில் இரண்டாவது நீர்.நமது வாயில் ஊறும் உமிழ்நீர் சுவையறிய துணையாவது ஈறறிவு உயிர்கள் புழுக்கள் நுண்ணுயிர்கள்.,...இவை நீரில் உயிர்ப்பவை.நிலத்தில் உள்ள ஓரறிவுயிரான புல் பூடு போல் இல்லாமல் நெளிந்து  அசைந்து நகரும் இயல்புடையவை.நிலத்திலிருந்து பிரிந்து வாழ்வது .ஆனால் நீரின்றி வாழ முடியாதவை ஈறறிவு உயிர்கள்.
             நிலத்திலும் நீரீலும் வாழும் புழுக்கள் இறகு பெற்று பறக்கும் பொழுது வண்ணத்துப் பூச்சி,தேனி என்று சிறகசைக்கும்போது மூன்றறிவுடைய உயிர்கள் ஆகி மூன்றாம் அறிவாகியா நாசி வழி மணம் நாடி பறக்கிறது.மூன்றறிவுடைய உயிர்கள் மூன்றாம் பூதமாகிய காற்றின் ஆளுகைக்கீழ் வறுகின்றன.காற்றின்றி பறக்க முடியாதல்லவா?
          நான்காவது அறிவாகிய கண்ணோடு தொடர்புடையது நான்காவது பூதமாகிய நெருப்பு.ஒளி வெளிச்சம் என்று ஆது பறவுகிறது.கண்ணே அதனை உணருகிறது.
         ஐந்தாவது பூதமாகிய வானம் ஐந்தாவது அறிவாகிய ஒலியை உள்வாங்கி செவி வழி உணர்த்துகிறது.செவித்துளைக்கு இடையேஉள்ள காலியிடம் ஆகாசம் எனப்படுகிறது.அதுவே ஓங்கார ஒலியை எப்போதும் உள்வாங்கி வைத்திருக்கிறது.இந்த ஐந்தறிவையும் உணர்ந்து உள்வாங்கி,வெளிப்பாய்ச்சும்  ஆறாவது அறிவை உடையவனே படைப்பின் உச்சகட்டமான மனிதன்.
          ஓரறிவு,ஈறறிவு உயிர்களாய் நாம் பரிணாமம் பெற்றதை" நூறுகால் புழுக்களாக ஊர்ந்தோம்'  எட்டுக்கால் பூச்சிகளாக நகர்ந்தோம், நான்குகால் விலங்காக நடந்தோம் இப்போது இரண்டுகால் மனிதராக எழுந்து நின்றோம்"என்று அழகாகச் சொல்கிறார்  'நினைவுக்கலை ஏந்தல் இரா, கனக சுப்புரத்தினம் அவர்கள்.
          ஐம்பொறி,அதன் வழி நுகரும் ஐந்தறிவு, அதனைத்தரும் 'பொருள் முதலாகிய உலகத்தை'   உணரும் விலங்கிற்குப் பொருளே (Matter) முதல்! ஆனால் மனிதனுக்கு கருத்தே முதல்! இதுவே மிக முக்கிய வேறுபாடு. விலங்கு வாழ்வில் உடலே பிரதானம். மனித வாழ்வில் அறிவே பிரதானம்.உடலையும் அறிவையும் கடந்த ஞானநிலையே தெய்வநிலை.இந்த ஆறு அறிவும் மனித உடலில் ஆறு சக்கரங்களாக மலர அவற்றை கடந்த ஏழாவது அறிவே தெய்வநிலை!
          மனத்தால் உயருகிறவன் மனிதன்.அந்த மனத்திலிருந்தும் விலகி உயருகிறவன் தெய்வம். அப்படி மனம் கடந்த மகான்கள் பிறர் மனத்தில் ஓடும் எண்ணங்களை எளிதாக உணர்ந்து சொல்லிவிடுவார்கள்.அதனால் அவர்கள் தெய்வங்களே என்கிறார் திருவள்ளுவர்.
     'ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்'
         மனிதன் இப்படித்தான் தெய்வமாக முடியும்.!
       அடுத்து ஒவ்வொரு பூதங்களாக பார்ப்போம்.அன்பு ஆத்மா .த,சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக