திங்கள், 11 ஜூலை, 2016

மணிப்பூரகம் மூண்றாவது சக்கரம்.

          மணிப்பூரகம் (மேல்வயிறு)-  
             இது (தொப்பூழ்) சுவாதிட்டானத்தில் இருந்து எட்டுவிரல் அளவு மேலே நெஞ்சுக்குழி என்னும் இடத்தில் கோழி முட்டையை போன்று 1008-நாடிநரம்புகளும் சூழ நாடி நரம்புகளுக்கெல்லாம் வேர் போல் உள்ளது.இதை உந்திக்கமலம் என்று கூறுவர் இது தொப்புழுக்கு நேரில் அப்பு நிலையில்.ஏழாம் பிறைக்கு இணங்கி இருக்கும்.இதன் நடுவில் பத்து இதழுடைய மலர் வட்டமும்:அதன் நடுவில் (மகார)எழுத்தும் மகாரத்தின் நடுவில், மகாவிஷ்ணும், மகாலட்சுமியும் எழுந்தருளியிருப்பர்.இது பச்சை நிறமுடையது .
           தியானம் செய்யும் போது பச்சை நிறம் வந்து வந்து  போனால் குண்டலினி சக்தி மணிப்பூரகத்தை தொட்டு தொட்டு செல்கிறது.தொடர்ந்து பச்சைநிறம் நீடித்தால் குண்டலினி அங்கேயே இருக்கிறது .எனலாம் இது தியானத்தில் அறிவது.
              மனிதனிடம் இங்குதான் நான் என்னும் அகங்காரம் தோன்றுகிறது .கணவன் மனைவி கருத்து வேறுபாடு இந்த இருபது வருத்தில் பெருசா எனக்கு என்ன செஞ்சீங்க....? ஏதாவது சந்தோஷப் படறாப்ல வாங்கித்தந்தது உண்டா.?என்று பொருமுகிறால் மனைவி .எங்க .உன் நெஞ்சில் கைவைத்து சொல்லு! என்று கணவன் அலறுகிறான்.ஒரு நிமிடம் ஏன் நெஞ்சில் கைவைக்க வேண்டும்? யோசியுங்கள்.

               மரணத்தால் கணவனை பிரிந்த துயரத்தில் அழுகிற மானைவி" என்னை விட்டுப் போய்டீங்களே" என்று அலறுகின்ற போது ' என்னை என்று' என்ற பாவனைக்கு அடையாலமாக நெஞ்சிலே அடித்துக்கொள்கிறாளே ஏன்?
யோசியுங்கள்.
             "நானா  ஏமாத்துவேன் ....நானா ஏமாத்துவேன்'' என்று வருந்துகிற நண்பன் நான் என்கிற போதெல்லாம் இதயத்தில் கைவைத்துக் கைவைத்துப் பேசுவது ஏன்? யோசியுங்கள்.
             நான் என்கிற பாவம் நெஞ்சுடன் தொடர்புடையவையா? மனிதன் உணர்ச்சியின் மொத்த வடிவம்.உணர்ச்சியின் மைய்யப்புள்ளி நெஞ்சு.கோபம், தாபம், காமம், கொடூரம், வஞ்சனை என்கிற உணர்ச்சிகளின் வேறுபாட்டை துள்ளியமாக உணர்த்தும் சதைத்துண்டு மைய்ய வட்டம் நெஞ்சு. அதுதான் உணர்ச்சி மைய்யம்.மணிப்பூரக சக்கரத்தில் இயங்கும் உடல் உறுப்புகளில் கல்லீரல், கணையம், இறைப்பை ஆகியவை இந்த சக்கரத்தில் அடங்கும்.
            உடம்பில் சக்கரையைச் செரித்துச் சமன் படுத்தும் இன்சுலின் சுரக்கும் சுரப்பி இச்சக்கரத்தில் அடக்கம். சில நேரங்களில் சுறு சுறுப்பு.சில நேரம் சோம்பல். உண்டுபண்ணும் அட்ரினல் என்னும் நாலமில்லா சுரப்பிகள்.இந்த சக்கரத்தின் அங்கமே. தலைமையுணர்வு,  சீரான ரத்த ஓட்டம்,  உழைப்புக்கான உடல் வெப்பம்  ஆகியவற்றை அட்ரினல்சுரப்பி தான் தீர்மானிக்கிறது. இந்த மணிப்பூரக சக்கரம் உணர்ச்சி மையமானதால் அடிக்கடி உர்ச்சி வசப்பட்டதால் தான் இரத்த அழுத்த நோய்.நீரிழிவு.நோய் வருகிறது, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தியானம்,  செய்யும் பொது மேல் வயிறான நெஞ்சுக்குழியில் கவனம்.செய்து வந்தால் .நோய் தீரும்.
           பத்துபேர் பயணம் செய்கின்ற இடத்தில் சாப்பிட படபடப்பவன். சுவாதிடான நிலையில் குண்டலினி எழுந்த நிளையாளர்.தன்னோடு வந்த எல்லோரும் சாப்பிட்டார்களா? கவலைப்படுதல் மணிப்பூரக நிலை. 
                 அந்தொ ...மனித குலம் முழுமைக்கும் உணவு கிட்டியதா?  என்று வடலூர் வள்ளளார் போல் வாடுபவர்களின் குண்டலினி அநாகதத்தில் நிற்க்கிறது.வாருங்கள் நாமும் அநாகதம் நோக்கிப் பயனப்படுவோம்.
        அன்பு ஆத்மா த.சிவகிரி .ஓம் சிவார்ப்பணம்.
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக