புதன், 29 ஜூன், 2016

சுவாதிட்டானம் இரண்டாவது சக்கரம்

          நாபி (தொப்புள்)என்ற அடையாலம் இல்லாத மனிதன் உண்டா?எல்லா மனிதர்க்கும் தாயுடனான தொடர்புக்கு அடையாலம் நாபி.ஒரு பலூனை ஊதி கட்டிய மாதிரி வயிற்றுப் பகுதியில் இருக்கும் சரீர முடிச்சு நாபி.இதுவே பிரம்மகிரந்தி..,.அதுவே இரண்டாவது ஆதாரம் சுவாதிட்டானம் சக்கரம்.ஊழ் என்றாலே தொடர்ச்சி என்று பொறுள்.நமது பண்டையத் தொடர்புக்கான அடையாள முத்திரையே நாபி.இதனை 'தொழ்ப்பூழ்' என்றும் கூறுவார்கள்.

              மூலாதாரத்தில் உள்ள குண்லினி என்ற ஜீவசக்தி நாபிக்கு அருகில் நகர்ந்தால் வாழ்வில் சில மாற்றங்கள் வரும்.பசி,உணவு,வாய்ச்சுவை ஆகிய வயிறு சம்மந்தப்பட்ட வாழ்க்கைச் சுவை வரும்.நன்றாக சாப்பிட வேண்டும் விதவிதமாக சாப்பிட வேண்டும் .ருசிபேதம் வேண்டும்...இவையெல்லாம் சுவாதிட்டான இயக்கங்கள்.இதிலேயே நின்று விடாமல்.மூண்றாம் சக்கரமான.மணிப்பூரகத்தை நோக்கி முன்னேற வேண்டும்.சாப்பிடுவது தூங்குவது நடுநடுவே இவிருத்தி செய்வது என்ற செயல்கள்.மட்டுமே இருந்தால் மூலாதாரம்,சுவாதிட்டானம்.என்ற இரண்டு சக்கரங்களுக்கு இடையிலேயே இவர்கள் பயணப்படுகிறார்கள் என்று பொருள்.
               சாப்பாடு "அதற்கான ஏற்ப்பாடு- அதற்க்காக பெரும்பாடு-இல்லாவிட்டால் கூப்பாடு-இதுவே இவர்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் வட்டப்பயணம்.
                 விதவிதமாய் சமைத்து விரும்பி சாப்பிடுவது தவறில்லை.இது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.,...பாதி டீ வி சேனல்களை பெரும்பாலான பத்திரிகை பக்கங்களை ஆக்கிரமிப்பது சமையல் கலைதான்.உலகத்தின் பெருவாரியான உயிர்க்கூட்டத்தின் பெருங்கவலை,சாப்பாடுதான்! இதில் சிலபேர் ருசி விஷயத்தில் ஆபார கவணம் செலுத்துவார்கள்.
             அப்டியானால் சாப்பாட்டை ரசிக்கவோ! ருசிக்கவோ கூடாது என்கிறீரா என்று கேட்கிறீர்கள்? நான் அப்படி சொல்லவில்லை சாப்பாட்டு ருசி தெரியாதவனுக்கு கடவுளின் ருசி எப்படி தெரியும் எனவே ருசி அறிந்து மேல்நோக்கி அடுத்த சக்கரத்தை எட்டுவது நோக்கமானால் அந்தநிலையை விட்டால் தான் சாத்தியமாகும்.
            ருசியிலேயே இருந்தால் கடவுளை எட்டமுடியாது .
              எப்போதும் சாப்பாட்டு நினைப்வர்கள்.இரண்டாம் சக்கரமான சுவாதிட்டாத்திலேயே இருப்பராவர்,இப்படி உணவுப்பிரிர்களுக்கு கூடவே காமப்பசியும் மேலோங்கியே,இருக்கும் உடனே பிள்ளை பெரும் வேலைதான் நடக்கும்.
         ஏனென்றால் மூலாதாரம்,சுவாதிட்டானம் என்பதில் உழலும் வரை நாம் விலங்குகளே,..,.மணிப்பூரகம் என்கிற மூன்றாம் சக்கரத்தை நோக்கி நகர்ந்தால் தான் மனிதத்தன்மை வரும்.
           இந்த இரண்டாம் நிலையை சிலர் solar plexus  என்கிறார்கள்.தியானம் செய்யும் போது நம் கவனம் சுவாதிட்டானத்தில் வைத்தால் உதரவிதானத்திற்க்கு கீழே உள்ள முன்சிறுகுடல்,பெருங்குடல்,மலக்குடல்,சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் உடலளவில் செம்மையாகும்,புத்துணர்ச்சி பெரும்.
               இப்போதெல்லாம் மருத்துவர்கள் C,T,Scan,  M,R,I Scan என்று பார்க்கிறார்கள் எப்படி?  உள்ளுறுப்புகளை ஒரு திரையில் படமாகக் காட்டும் Scaner வந்து விட்டது.மருத்துவர்கள் உள்ளுறுப்புளை  Scaner கருவி கொண்டு பார்ப்பாது போல் நாம் நம் மனத்தாலே Scan செய்ய முடியும்!    ஆச்சரியமாக இருக்கிறதா?    முயற்சி செய் முடியும்.
            உள்ளுறுப்புகளில் வலி,சிக்கல் தோன்றினால் நன்றாக மேலே பார்த்து படுத்தவண்ணம்,அல்லது பத்மாசனம் இட்டமர்ந்து, நமது கவனத்தை அல்லது மனதை அந்த இடத்திற்க்கு அனுப்பலாம்.திரும்பத் திரும்பப் பழகினால் துல்லியமாக உடல் பிரச்சனைகளை உணரலாம்.தலாய்லாமாக்கள் இத்தகைய கலையில் வல்லவர்களாக இன்றும் உள்ளனர்.
              நாடித் துடிப்பை கவனித்து, இதயத்தின் அருகே காதை வைத்து உன்னிப்பாகக் கேட்டு, குருதி வெள்ளாமாய் கட்டுக்கடங்காமல்  பாய்வதை' கவிதை மாதிரி வர்ணித்தார் ஒரு லாமா.டாக்ர்கள் பரிசோதித்து இதயத்தில் அவருக்கு ஒரு வால்வு அடைத்து திறக்கும் சக்தியை இழந்து விட்டதாக கண்டறிந்தனர்.பசி,பசியின்மை, அமிலச் சுரப்பு, குடற்ப்புண், Gastric Ulcer, சிறு நீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள்  இரண்டாவது சக்கரத்தையும், முதல் சக்கராத்தையும் அதிகமாக வேலை வாங்கியவர்கள்.ஆனால் அதற்க்கு ஆற்றல் கொடுக்கத் தவறியவர்கள்.
           வாழ்க்கை முறையில் இவ்விரு சக்கரங்களை அதிகம் பயன் படுத்தியவர்கள் தியான முறையில் இவ்விருச் சக்கரங்களிலும் மனதை நிறுத்தினால் அதன் பழுதுகளில் இருந்து  வெளிவர முடியும்.தியானம் என்பது எந்த மதத்தையும் கடவுளையும் சார்ந்தது இல்லை.கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட தியானம் செய்ய முடியும்.
        அடுத்தச் சக்கரமான மணிப்பூரகம் போகலாம் வாங்க!    
       அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவிர்ப்பணம்.

செவ்வாய், 28 ஜூன், 2016

பஞ்ச நந்தி பெருமான் அறிவோமா!

          பஞ்ச நந்திபெருமான் பற்றிய தகவல்கள்.  
          பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் அமைந்திருப்பதைக் காணலாம். அவை இந்திர நந்தி, வேத நந்தி (பிரம்ம நந்தி), ஆத்ம நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது), மால்விடை (மகாமண்டபத்தில் இருப்பது), தரும நந்தி என்பவையாகும்.
              இந்திர நந்தி :
✫ ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய, இந்திரன் வடிவாக விளங்கும் இந்த 'நந்தியைப் போகநந்தி" என்றும், 'இந்திர நந்தி" என்றும் அழைக்கின்றனர்;. இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.

               வேத நந்தி :
✫ பின்னர் ஒருமுறை பிரம்மதேவன் நந்தி வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். வேதனான பிரம்மன், நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை 'வேத நந்தி", 'வேத வெள்விடை", 'பிரம்ம நந்தி" என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். பிரம்மம் என்பதற்கு அளவிட முடியாத பெருமைகளை உடையது என்பது பொருளாகும். அதற்கேற்ப இந்த நந்தியை மிகப்பெரியதாகவும், கம்பீரமாகவும் அமைப்பர்.
                 ஆன்ம நந்தி :
✫ ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி 'ஆன்ம நந்தி" ஆகும். இது உலக உயிர்களான (பசுக்கள்) ஆன்மாக்கள் பதியாகிய சிவபெருமானைச் சார்ந்து, அவருடைய நினைவில் நிலைப்பெற்றிருக்க வேண்டிய தன்மையை உணர்த்துகிறது. சிவாலயத்தில் பிரதோஷக் காலங்களில் இந்த நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

                    மால் விடை :
✫ ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார்கள். தாங்கள் அளிக்கும் இந்தத் தேர் இல்லாமல் சிவபெருமானால் முப்புரங்களை வெல்ல முடியாது என எண்ணினார், அதை உணர்ந்த சிவபெருமான், அந்தத் தேர்தட்டின் மீது தன் வலது காலை ஊன்றி ஏறினார் அவ்வாறு அவர் ஊன்றிய போதே அத்தேரின் அச்சு மளமளவென்று முறிந்தது. தேவர்கள் தாங்கள் செய்தளித்த ஒப்பரிய தேர் பெருமானின் ஒரு கால் அழுத்தத்தைக் கூடத் தாங்க மாட்டாமல் முறிந்தது கண்டு, அஞ்சி பெருமானைத் தொழுதனர், அப்பொழுது திருமால் இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கி அவரை மகிழ்வித்தார். இந்நினைவு நீங்காது இருக்கும் பொருட்டு தானும் நந்தி வடிவம் கொண்டு, அவர் சன்னிதியில் நிலையாக எழுந்தருளினார். இந்த நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணத்துள் அமைந்துள்ளதாகும். இதனை 'மால்விடை", 'மால்வெள்விடை" என்று பலவாறு அழைப்பர்.
                  தரும நந்தி :
✫ மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே 'தரும நந்தி" என்பதாகும். பிரளயவெள்ளம் பொங்கிப் பெருகி வானளவு எழுந்து உலகினை அழிக்கும் அந்த சங்கார காலத்தில் யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கும், அப்போது தருமம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டார். இவ்வகையில் தரும நந்தியானது, இறைவனைப் பிரியாது அவருடனேயே இருக்கும். இதை உணர்த்தும் வகையில், இந்த நந்தி இறைவனுக்கு அருகாமையில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருக்கின்றது.

           பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காண்கிறோம்.திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.
    (அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.)

எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?

 
           இந்துக் கடவுள்களுக்கு வெவ்வேறு வாகனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனம் அமைந்தது எப்படி என்பது பற்றி சுவையான கதைகளும் உள்ளன. பெரும்பாலும் இவைகள் தத்துவத்தின் பெயரில் அமைந்த கதைகள்தான். வேத காலம் முதல் இந்து மதத்தில் வாகனங்கள் உண்டு. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் வாகனக் குறிப்புகள் பற்றி தனிக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கும் என்ன வாகனம் என்பதை பற்றி இங்கு காண்போம்.
★ விநாயகர் - மூஞ்சுறு
★ முருகன் - மயில்
★ சிவ பெருமான் - நந்தி
★ பைரவர் - நாய்
★ அய்யப்பன் - புலி
★ லட்சுமி - செந்தாமரை, ஆந்தை ★ சரஸ்வதி - வெண் தாமரை, அன்னம் .
★ விஷ்ணு - கருடன்.
★ பிரம்மா - அன்னம் .
★ கண்ணன் - ஆல இலை .
★ சண்டி தேவி - பன்றி.
★ துர்க்கை - கலைமான் .
★ இந்திரன் - ஐராவதம் யானை.
★ காமதேனு - பசு .
★ குபேரன் - கீரி .
★ அக்னி - ஆடு
          நவகிரக வாகனங்கள் .
★ சூரியன் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் .
★ சந்திரன் - மான்கள் பூட்டிய ரதம் ★ செவ்வாய் - ஆட்டுக் கிடா .
★ புதன் - குதிரை .
★ வியாழன் - யானை .
★ சுக்ரன் - முதலை .
★ சனி - காகம்.
★ ராகு - சிங்கம், புலி .
★ கேது - மீன்.
        (அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்)

திங்கள், 27 ஜூன், 2016

மகாலட்சுமி வரம் பெரவேண்டுமா!

              மகாலட்சுமி நிலைத்திருக்க பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை ! 
           மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறைப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள். தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள். இவள் “ஈம்” என்ற பீஜாட்சரத்தை உடையவள். இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள். இவளை வணங்குபவர்களை அனைத்தும் அருளும் மகாலட்சுமி நம் வீட்டில் நிலைத்திருக்க குடும்ப தலைவிகளான பெண்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.

     கடைபிடிக்க வேண்டியவை .

           ✯ பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.
         ✯ காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.
        ✯ விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.
             ✯ நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
          ✯ வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.
         ✯ வெள்ளிக்கிழமை அன்று மாலையில் பணம் கொடுத்தல், வாங்குதல் மற்றும் ஊசி கடன் வாங்குதல் கொடுத்தல் போன்றவை செய்யக்கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரமலான் சிந்தனை உங்கள் கடமைகளை தவற விட்டு அடுத்தவர் மீது சுமத்தி பாவத்தை சுமக்காதீர்கள்.
         (அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பணம்.)

வலம்புரி சங்கு அறிவோமா!!

            வலம்புரி சங்கின் மகிமைகள்   வலம்புரி சங்கானது விஷ்ணு பாகவானின் கையில் உள்ள ஆயுதம். சங்கானது கோயில்களில் பூஜை செய்யும் போது ஊதுவார்கள். இது தவிர புரட்டாசி மாதம் விரதம் இருப்பவர்கள் விரத தினத்தன்று தங்கள் வீட்டில் வைத்து ஊதி பூஜை செய்வார்கள். அது மட்டுமல்லாமல் அதிக சக்தி கொண்டது இந்த வலம்புரி சங்கு. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
        தோஷம் நீக்கும் வலம்புரி சங்கு :
            ❄ ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியன நீங்க வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்க்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் அந்த தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.
           ❄ இந்த வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்.
             ❄ ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்கும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்தபின் அதனால் மங்கள ஸ்நானம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும்.
          ❄ செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சங்கிற்கு பூஜை செய்யலாம். ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும். இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.
            ❄ அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும். சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும்.
          ❄ புதுமனை செல்பவர்கள் சிறப்பாய் வாழ்ந்திட, கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன்கள், கல்வியில் கவனமின்மை, தொழில் கூடங்களில் தொய்வு, எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்க வல்லது வலம்புரிச் சங்கு. வாஸ்து குறைகள் முற்றிலும் நீங்க, நினைத்த காரியம் வெற்றி உண்டாக, ஆவி பிரச்னைகள் தீர வலம்புரிச் சங்கு வழிபாடு உதவும். மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது.
(அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.)

ஞாயிறு, 26 ஜூன், 2016

சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாதது ஏன்?

 
            ♦ சரஸ்வதி இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளில் ஒன்றாகும். பேச்சுக் கலையின் தேவதை எனப் பொருள்படும் 'வக் தேவி" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.
           இந்துக்கள், சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகின்றனர். அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள் மற்றும் பெருமைகளை கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் எடுத்துரைத்துள்ளனர். இத்தகைய சிறப்புகள் இருந்தும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் சரஸ்வதிக்கு கோயில் இல்லை.
             தமிழ்நாடு முழுவதும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில் ஆகும்.
              ♦ காமகோட்டத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனால் அதுகூட பிரம்ம பத்னியான சரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேஸ்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜசியாமளையான மகா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வதுண்டு. சரஸ்வதிக்கு பிம்பம், சந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன.
             ♦ மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளைத் துதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவதால், அது பசுமரத்தாணியாக மனதில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.
           ♦ சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பதிவிரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில். அவள் எப்படிப் பதிக்குக் கோயிலில்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.
            ♦ சகல கலைகளுக்கும், கல்வி செல்வத்திற்கும் அதிபதியாகவும், அதி தேவதையாகவும் விளங்குபவள் சரஸ்வதி தேவி. கலைமகள், வாணி, பாரதி, காயத்ரி, வாகீஸ்வரி, சகலகலாவல்லி, நான்முகன் நாயகி, என பல்வேறு திருப்பெயர்களால் போற்றப்படுகிறாள்.
           ♦ பிரமனுக்கு தனி கோயில்கள் இல்லாவிட்டாலும், பிரம்மனின் நாயகி கலைமகளுக்கு நாகை மாவட்டம், கூத்தனூரில் தனிக்கோயில் உள்ளது. சரஸ்வதி பூசை அன்று தேவியின் திருப்பாதம் வெளிமண்டபம் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதை பக்தர்கள் மலராலும், குங்குமத்தாலும் அர்ச்சித்து வழிபடுவர். தேர்வில் வெற்றி பெற, கலைகளில் தேர்ச்சி பெற, விரும்பிய துறையில் பயில, பணி புரிய வரம் அருள்பவள் சரஸ்வதியே. இங்கு அவளை வழிபட வேண்டிய யாவும் உடனே கிட்டும்.
            ♦ சிவன் ஆலயங்கள் பெரும்பாலானவற்றில் சரஸ்வதி தேவி கோஷ்ட தேவியாகவும், தனி சந்நிதி இறைவியாகவும் இருக்கிறாள். மற்ற தெய்வ கோயில்களிலும் மாடங்களிலும், கோபுரங்களிலும், நுழைவாயில் சிற்பங்களிலும் என எங்கும் சரஸ்வதி காணப்படுகிறாள். நம் தலையெழுத்தை எழுதுகிறவரின் தலையெழுத்து இப்படியல்லவா இருக்கிறது......!
      அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பணம்.

சனி, 18 ஜூன், 2016

வெள்ளெருக்கு வினாயகர் மூலிகை

         வெள்ளெருக்கு விநாயகர்.
                  ✫ வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

         பிள்ளையார் எத்தனை விதமாக இருந்தாலும் வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகருக்கே சக்தி அதிகம்.
          ✫ புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
        ✫ ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் இரண்டு வகை உண்டு. எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.

          ✫ வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகரின் மகிமையை உணரலாம்.
          ✫ வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் ஏற்றினால் சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வட வேரில் மணிமாலை செய்யலாம். 

           ✫ சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிப்பட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும். தனம், தான்யம் சேரும். (அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்!!!!