விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்?
🌅 தினமும் விளக்கேற்றி அம்மனை வழிபடுவது சிறப்பு. மாலை நேரத்தில் விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது ஏன் தெரியுமா?
🌅 மாலை நேரம் வழிபாட்டுக்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல.
🌅 எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள் தலைவாரி, பூமுடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பை தரும்.
🌅 திருமகள் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் தினமும் மாலையில் வீட்டின் பூஜை அறையிலும், வாசலிலும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
🌅 தீபம் ஏற்றும் போது கொல்லைபுற கதவை மூடிவிட வேண்டும். அல்லது பின்புற கதவு இருந்தால் அதை மூடி விட வேண்டும்.
🌅 தீபங்களில் சிறந்த தீபம் நெய் தீபம். நெய் தீபத்தை வீட்டில் வைத்து வழிபட சிறந்த வளமும் நலமும் பெறலாம்.
அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.
புதன், 24 ஆகஸ்ட், 2016
விளக்கேற்றும் வேளை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மிகவும் சிறப்பு வாய்ந்தது ஐயா
பதிலளிநீக்கு