திங்கள், 1 ஆகஸ்ட், 2016

அழகன் முருகன்.காணலாம்

          அழகன் முருகனின் பதினாறு திருக்கோலங்கள்.
             அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பெயர். அனைவரின் மனதிலும் கூடி கொள்ளும் முருகனை ராஜ வடிவில் காண, கண் கோடி வேண்டும். குறிஞ்சி நிலக்கடவுளான முருகன் பதினாறு திருக்கோலங்களில் அருளாட்சி புரிகின்றார்.
         🌟 சக்திதரன் : ஒரு முகம், இரு கரங்கள், சக்திப்படையுடன் காட்சியளிப்பவர்.
         🌟 ஸ்கந்தன் : இடையில் கௌபீணம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம்.
         🌟 கஜவாகனன் : யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம்.
         🌟 சரவணபவனன் : பன்னிரு கரங்கள், ஒரு முகம், ஆறு குழந்தையாகத் தோன்றி அம்பிகையால் ஒரு முகமாக மாற்றப்பட்ட திருக்கோலம்.
         🌟 தேவசேனாபதி : ஆறுமுகம் - பன்னிருகரங்கள் கொண்டு இந்திரனின் மகளான தெய்வானையை மணந்த கோலம்.
          🌟 சுப்பிரமணியன் : ஒரு முகம், நான்கு கரங்கள், ஆயுதம் பற்றிய கீழ்க்கரங்களால் அபயம், வரம் அளித்து அருளும் கோலம் கொண்டவன்.
          🌟 கார்த்திகேயன் : ஆறுமுகங்களும் ஆறு கரங்களும் உடையவன். அபய-வரமளிக்கும் கரங்கள். பிற கரங்களில் ஆயுதங்கள் கொண்ட கோலம்.
        🌟 குமரன் : நான்கு கரங்களுடன் தேவியான தெய்வானை வலப்புறத்தில் அமைய நின்ற திருக்கோலத்தில் அருள்பவன்.
        🌟 ஷண்முகன் : ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் ஆயுதங்கள் ஏந்திய நிலை. மயில் மீது முருகன் அமர;ந்திருக்க அருகில் தேவியர் நின்ற கோலம்.
          🌟 தாரகாரி : சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். ஆறுமுகம் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய போர்த் திருக்கோலம்.
          🌟 வள்ளிமணாளன் : தமிழரின் பண்பாடான களவு ஒழுக்கத்தின் மூலம் காதல்கொண்டு திருமணம் புரிந்த கோலம்.
           🌟 பாலமுருகன் : சிறிய பாலக வடிவம், ஒரு கரத்தில் தாமரை மலர்கள், மற்றொரு கரத்தை இடைமீது இருத்திய அழகிய தோற்றம்.
           🌟 சேனாளி : ஆறுமுகம் பன்னிரு கரங்கள், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை, ஏனைய கரங்களில் ஆயுதங்கள்.
          🌟 கிரௌஞ்சபேதன் : தாரகன், சூரனின் தம்பி இவன் கிரௌஞ்சமலை என்ற மலையின் வடிவில் தனது அண்ணனின் கோட்டையைக் காத்து நின்றான். சக்திவேலின் மூலம் அவனை அழித்து நின்ற திருக்கோலம். ஆறுமுகம், ஆயுதம் தாங்கிய பன்னிருத் திருக்கோலங்கள்.
           🌟 சிகிவாகனன் : சூரனின் சம்சஹாரத்திற்குப் பின் மயிலான அசுரனின் மீது அமர்ந்த கோலம்.

            🌟 பிரம்ம சாஸ்தா - பிரணவத்தின் பொருளறியா பிரம்மனை சிறையிலடைத்து, தானே அவரது படைப்புத் தொழிலை ஏற்றதால், பிரம்மனது பொருட்களான அட்சமாலை மற்றும் கெண்டியை ஏந்திய திருக்கோலம்.
           (ஹோம மந்திரம் - ஹோமத்தின் பலன் :
ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ : சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாகும்.)
        அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக