புதன், 17 ஆகஸ்ட், 2016

காயத்திரி மந்திரம்.


             காயத்ரி மந்திரம்,            மந்திரங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது விசுவாமித்திரர் என்ற முனிவரால் இயற்றியதாகக் கூறப்படுகிறது. காயத்ரி மந்திரமானது அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரமாகும்.
                மந்திரம் :
          ஓம் பூர் புவஸ்ஸூவ தத் சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத் .
          காயத்ரி மந்திரத்தின் நிதியும் பலன்களும் :
          ❊ காயத்ரி மந்திரத்தைப் பொருள் புரிந்து குருமுகமாக உபதேசம் பெற்று மந்திரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை மந்திரம் செய்யும்போது காயத்ரி தேவியையும், சூரிய பகவானையும், ஸ்ரீமந் நாராயணனையும் தியானித்து பக்தி சிரத்தையோடு மந்திரம் செய்யவேண்டும். இதனால் மனோபலமும் வசீகர சக்தியும் கூடும்.
           ❊ காயத்ரி மந்திரத்துக்கு ஆத்ம சித்தி, சரீர சித்தி மிக அவசியம். மந்திரம் செய்வதற்கான இடம், சுத்தமும் காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடமாகத் திகழ்தல் வேண்டும்.
          ❊ நதிக்கரைகள், திருக்குளங்கள், அமைதியான மலைப்பிரதேசங்கள், மகான்களின் அதிஷ்டானம், திவ்யதேசங்கள் போன்ற இடங்களில் அமர்ந்து தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
          ❊ பசு மடத்தில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும். அதுபோன்று கோவில் கும்பாபிஷேக காலத்தில் யாக சாலையில் அமர்ந்து மந்திரம் செய்தால் பலகோடி நன்மைகள் பெறலாம்.
         ❊ சூரியோதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் காலம்வரை எப்போதும் இம்மந்திரத்தை உச்சரிக்கலாம். வைகறையிலும், அந்தி வேளையிலும் செய்வது உத்தமம்.

           ❊ காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியவாறும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். எரிகின்ற தீபத்தைப் பார்த்தோ, அம்பாள் படத்தைப் பார்த்தவாறோ கும்பிட்டால் கூடுதல் பலனைப் பெறலாம். மந்திரம் செய்யும்போது இடையில் எழுந்து செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மீண்டும் கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டு ஜெபத்தைத் தொடர்ந்து செய்யலாம். காயத்ரி ஜெபத்தின் மூலம் ஞானமும் அமைதியும் வாழ்வில் பெறலாம்.

   ஸ்தானங்களின் குறிப்புகள் :

         ஒன்றாம் இடம் என்பது செயல், கௌரவம், திறமை, புகழ், கீர்த்தி இவற்றைக் குறிக்கும். இரண்டாம் இடம் என்பது வாக்கு, வித்தை, தனம், குடும்பம், ஆகியவற்றைக் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக