ஆடி மாதத்தின் சிறப்புகள் .
தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு. ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்த மாதமாக உள்ளது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பானதாகும். இந்த நாட்களில் பெண்கள் உரிய முறைப்படி பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தால் அம்மனின் முழுமையான அருளைப் பெற முடியும். குடும்பத்துக்கு அச்சாணியாகத் திகழும் பெண்கள் ஆடி மாத வழிபாடுகளில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களது குடும்பம் மேம்படும் என்பது ஐதீகமாகும். ஆடிப் பிறப்பு
✶ மாதத்தின் முதல் நாளான ஆடிப் பிறப்பன்று, புது மாப்பிள்ளையைப் பெண்ணுடன் அழைக்கும் பெண் வீட்டார். அறுசுவை உணவளித்து கௌரவிப்பர். பின்னர; மாப்பிள்ளையை மட்டும் திருப்பி அனுப்பிவிடுவர். அம்மாதம் முழுவதும் மணமான புதுப்பெண், தன் தாய் வீட்டிலேயே தங்கிவிடுவாள். ஆடி மாதம் பெண்கள் மாதம் என்பதால் பெண் தெய்வங்களைக் கொண்டாடி மகிழ்வர்.
(ஆடித் தபசு )
✶ ஆடித் தபசு என்பது ஆதிசக்தி கோமதியம்மனாக தவமிருந்த நிகழ்வினைக் குறிக்கும் திருவிழாவாகும். இந்த திருவிழா ஆடி மாதம் சங்கரநாராயணன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. சிவனும், விஷ்ணுவும் ஒன்றாயிருந்த காட்சியைப் பார்வதி தேவி காண விரும்பினார். அவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆடி மாதம் பௌர்ணமி அன்று இடது பாகம் சிவனாகவும், வலது பாகம் நாராயணனாகவும் காட்சி அளித்தார் சிவபெருமான்.
(ஆடிப் பெருக்கு)
✶ நுரை பொங்க இரு கரைகளையும் தொட்டுப் பொங்கிப் பெருகி ஓடும் காவேரியை மக்கள், 'வாழி காவேரி" என்று வாழ்த்தி பூக்களால் அர்ச்சித்து வணங்குவார். குடும்பத்துடன் நீராடி மகிழ்வார்கள். ஆண்டாளின்
(ஆடிப் பூரம)்
✶ ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பொதுவாகப் பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி இருக்கும். இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவாள்.
அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.
திங்கள், 1 ஆகஸ்ட், 2016
ஆடி மாதத்தின் சிறப்புகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக