புதன், 24 ஆகஸ்ட், 2016

உபவாசம் அறிவோமா!!

            எத்தனை உபவாச விரதங்கள் உள்ளது தெரியுமா?
            உபவாசங்கள் என்பது எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி இருக்கும் விரத முறையாகும். இது நமது உடலுக்கு நன்மையும், மனதை கட்டுப்படுத்த சிறந்த வழி முறை ஆகும். இந்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள உபவாச விரதங்கள் பற்றி பார்ப்போம்.
            🔔 உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
            🔔 தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 பசுவின்பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
             🔔 இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
              🔔 மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
              🔔 மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
               🔔 மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
                🔔 மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
               🔔 இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
             🔔 தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும், நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
              🔔 ஒரு நாள் முழுவதும் அரச இலை தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
             🔔 முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறு நாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
              அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக