வெள்ளி, 8 மே, 2015

அம்மா, அம்மா, அம்மா,

ஒலியே எழுத்தின் தந்தை, ஒலித்திறள் வெவ்வேறு எழுத்துக்களாக, வடிவெடுப்பதை தொல்காப்பியர்.
உந்தி முதலா முந்துவெளி தோன்றித்
தலையினும் மிடற்றிலும் நெஞ்சிலும் நிலை இப்
பல்லும் இதழம் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்பற்றமைய நெறிப்பட நாடி.(தொ,கா,எ,83)
தொப்புளிலிருந்து மேலே கிளர்கின்ற ஒளிக்காற்று நெஞ்சு, மிடறு, தலை, ஆகிய இடங்களில், நிலைகொண்டு. பல்,இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம், என்னும் உறுப்புகள் வழியாக வரும் ஒளியால் வெவ்வேறு எழுத்துக்களாக பிறக்கும். அப்படி வந்த எழுத்துகள் உயிர் தத்துவம் பெற்ற வார்த்தை தான் அம்மா, சொல்லும் போதே எத்தனை சுகம்பெருகிறது மணம். இந்த தமிழ் வார்த்தை எப்படி இருக்குகறது அனுபவித்து பாருங்கள். உடலுக்கு துன்பம் வந்தால் தன்னை அறியாமல் வெளிப்படும் வார்த்தை. சரி தமிழன் ஏன் இந்த வார்த்தையை மட்டும் தேர்வு செய்தான். உயிர் கொடுத்தவல் அம்மா, ஆகவே தமிழ் எழுத்தில் முதல் உயிர் எழுத்து, அ, தேர்வு செய்தான், உயிர் வளர மெய்,(உடல்)தேவை
எனவே, ம்,என்னும் மெய்யெழுத்தும் பத்து மாதம் கழித்து உயிர் +மெய் இரண்டையும் சேர்த்து உலவவிடுவதால் உயிர்மெய் எழத்தான, மா, என்னும் எழுத்தையும் சேர்தனர். இப்படி தான் தமிழன் தத்துவத்தின் அடிப்படையில் வார்த்தைகள் உருவகம் ஆனது. இது போல் அப்பா என்ற சொல்லும் உருவானது அதனைப் பற்றிய தகவல் பிறகு எழுதுகிறேன். அம்மா மென்மையானவர், மெல்லினத்திலும், அப்பா வன்மையாவர், என்பதால் வல்லினத்திலும், அமைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக