ஞாயிறு, 28 மே, 2017

சித்தராக வாழ்ந்த மகான் உடலை எரிக்கலாமா.

              🌴 இறந்தவர்களைப் புதைக்க வேண்டும்.எரிக்கக் கூடாது என்பது வள்ளற் பெருமானின் கண்டிப்பான கட்டளை. இதனை திருவருட்பாவில் சமாதி வற்ப்புறுத்தல் என்ற தலைப்பில் காணலாம்.உபதேசங்களிலும் திருமுகங்களிலும் காணலாம்.புலால் மறுத்தல் சமாதி வற்ப்புறுத்தல் ஆகிய இரண்டிலும் வள்ளளார் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்.சமாதானத்திற்கு இடம் வைக்கவே இல்லை.
            🌴 கண்டிப்பு என்றால் கண்டிப்புதான்.பிணத்தை எரிப்பது கொலை என்கிறார்.அந்த அளவுக்கு  எரியூட்டுதலை கண்டிக்கிறார்.சன்மார்க உலகில் சுடுகாட்டுக்கு இடமில்லை இடுகாட்டுக்கு மட்டுமே இடமுண்டு.
              🌴 திருமூலரும் தம் திருமந்திரத்தில் "சமாதிக் கிரியை" என்றொரு அதிகாரமே பாடியுள்ளார்.பதின்மூன்று மந்திரங்கள்.ஞானியர் இறந்தால் அவர்கள் உடலை எரிக்கக்கூடாது,சமாதி செய்ய வேண்டும்  என்று சிலபாடல்கள் வற்ப்புறுத்துகின்றன.எப்படி சமாதி வைக்க வேண்டும்  என்று சமாதிக்கிரியைச் சில பாடல்கள் விவரிக்கின்றன.
               🌴வள்ளலாரது சமாதி வற்ப்புறுத்தலுக்கும் திருமூலரின் சமாதிக்கிரியைக்கும் ஒரே ஒரு வேறுபாடு இறந்த எல்லோரும் புதைக்கப் படவேண்டும் எரிக்கக்கூடாது என்கிறார் வள்ளலார். இறந்த ஞானியர் (துறவிகளை) ப் புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது என்கிறார் திருமூலர். இறந்தாறைப்பற்றி, பொதுமக்களைப்பற்றி  சொல்ல வில்லை.
           அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெம்பும் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரினுண் செரு
வந்து நாய் நரிக்கு உணவாகும் வையகமே.
             (திருமந்திரம் 1910)
              🌴ஞானியின் உடல் தீயில் வெந்தால் நாடே தீயினில் வெம்பும் : வெந்து போகும். நாய் நரி உண்டால் போர் வந்து நாட்டுமக்கள் நாய் நரிக்கு உணவாவர்.
எண்ணிலா ஞானி உடல் எரிதாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.
            🌴(திருமந்திரம் 1911)
            🌴 ஞானியின் உடல் எரிக்கப்படுவது கோயில் எரிக்கப் படுவதற்க்கு ஒப்பாகும்.பூமியில் மழை பெய்யாது போகும். உலகில் பஞ்சம் உண்டாகும். மன்னர்கள் அரசை இழப்பர்.
புண்ணியமாம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லா மயங்கும் அனல் மண்டியே.
           🌴(திருமந்திரம் 1912)
           🌴 அவர்களைப் புதைப்பது புண்ணியம், எரித்தால் நாட்டில் அழிவு ஏற்ப்படும்.சரியாக சமாதி செய்யாமல் மண்ணில் அழிய விட்டால் நாட்டின் பொலிவு குன்றும்.மண்ணுலகெல்லாம் அனல் மண்டி மயங்கும்.
              🌴ஞானியின் உடம்பை எரித்தால் அது கோயிலை எரிப்பது போல் என்கிறார் திருமூலர்.நாட்டில் தீ விபத்துகள் ஏற்ப்படும், மழை பெய்யாது, போர்வரும், பஞ்சம் உண்டாகும் மன்னர் ஆட்சியை இழப்பர்,என்கிறார் எரிப்பதால் உண்டாகும் உற்பதங்கள் எத்தனை  எத்தனையோ? புதைப்பது  புண்ணியம் என்கிறார்.
உங்கள் அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம். (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக