திருக்குறளில் அடியவனின் சிறு ஆய்வு (1)திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
(2)திருக்குறளில் பயன்படுத்த படாத உயிரெழுத்து _ஔ.
(3)இரண்டு முறை வரும் ஒரே அதிகாரம் _குறிப்பறிதல்.
(4)அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து _னி
(5)திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்து _ள்,ங.
(6)திருக்குறளில் பயன்படுத்த படாத இரு சொற்கள். தமிழ் _கடவுள்.
(7)திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள். 14000.
(8)திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள், 42194. (9)திருக்குறளில் தமிழ் எழுத்தில் 247ல் 37 எழுத்துகள் பயன்படுத்த வில்லை.
(10)திருக்குறளில் 46 குறளில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
(11)திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரண்டு மலர்கள் குவலை, அனிச்சம்.
(12)திருக்குறளில் இடம்பெற்றுள்ள பழம் நெருஞ்சில்.
(13)திருக்குறளில் இடம் பெற்றுள்ள விதை குன்றிமணி.
(14)திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட இரண்டு மரங்கள் மூங்கில் பனைமரம்.
(15)திருக்குறளில் பத்து அதிகாரங்கள் உடமை என்று கூறியுள்ளார்.
(16)திருக்குறளில் ஏழு என்ற எண்ணிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
(17)திருக்குறள் உலக அறநூல்களில் முதன்மையானது.
(18)திருக்குறள் பதிணொன்கீழ்கணக்கில் ஒன்று.
(19)திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் நியூபோப்.
(20) திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்க பட்டது.
(21)திருக்குறளில் 120 க்கு மேல் உவமைகள் கூறியுள்ளார்.
(22)திருக்குறள் மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 இல் பதிப்பித்து முதல் முறையாக தஞ்சையில் வெளியிடப்பட்டது.
(23)தொடிற்கடின் அல்லது காமநோய் போல
விடிற்கடின் ஆற்றுமோ தீ (1159)என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்து உள்ளது.
(24)திருக்குறள் முதல் முறையாக உரை எழுதியவர் _மணக்குடவர். பத்தாவது உரை ஆசிரியர் பரிமேலழகர்.
(25)திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் உள்ளன. எழபது கோடி என்ற சொல் ஒரே குறளில் இடம்பெற்றுள்ளன.
(26)திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் கிடைக்கிறது.
(27)திருக்குறளில் அனிச்சம் மலர் நான்கு முறை, யானை எட்டு முறை, பாம்பு மூன்று முறை, இடம்பெற்றுள்ளன.
(28)திருக்குறளில் கடவுள் என்னும் சொல்,கடவுள் வாழ்த்து, என்னும் அதிகாரத்தில் பயன்படுத்த இல்லை.
(29)திருக்குறள் கடவுள் வழிபாட்டால், உள்ள நன்மை, 1.எல்லா உலகிற்கும் மேலதாய வீட்டுலகில் வாழலாம். 2.மனிதனை வருத்தும் துன்பங்கள் அவனைப் பற்றி.3.நல்வினை தீவினை உளவாகா. 4.பிறப்பறுத்து எல்லா காலத்திலும் ஒரே தன்மையாராய் வாழலாம்.
(30)திருக்குறள் இறை வழிபாடு தவறுதலால், 1.மனக்கவலையாய் எழும் துன்பங்கள் நீங்கா. 2.பிறப்பெனும் பெருங்கடலைக் கடக்க இயலாது. 3.ஐம் பொறிகள் இருந்தும் அவை பயனற்றனவாகவே இயங்கும்.
(31)திருக்குறளில் கடவுளை, 1.ஆதிபகவன் :முதன்மையாக நிற்கும் முழுமுதற்பொருள். 2.வாலறிவன் :தூய அறிவினன். 3.மலர்மிசை ஏகினான் :அன்பான் நினைவார் இதயகமலத்தில் விரைந்து வந்து தங்குபவன். 4.வேண்டுதல் வேண்டாமை இலான் :விருப்பு வெறுப்பு அற்றவன். 5.ஐந்தவித்தான் :ஐம்புலனால் எழும் ஐந்து அவா வினையையும் அடக்கியவன். 6.தனக்குவமை இல்லாதான் :உவமையால் விளக்க முடியாதபடி உயர்ந்துள்லவன். 7.அறவாழி அந்தணன் :அறக்கடலாக விலங்குபவன். 8.எண்குணத்தான் :எண்ணத்தக்க குணங்களை உடையவன் (அல்லது) எட்டு வகையான குணங்களை கொண்டவன். இவ்வாறு பல பெயர்களில், இறைவனை கூறுகிறார்.
(மீண்டும் ஆய்வோம்)
செவ்வாய், 19 மே, 2015
திருவள்ளுவர். திருக்குறள்
வெள்ளி, 8 மே, 2015
அம்மா, அம்மா, அம்மா,
ஒலியே எழுத்தின் தந்தை, ஒலித்திறள் வெவ்வேறு எழுத்துக்களாக, வடிவெடுப்பதை தொல்காப்பியர்.
உந்தி முதலா முந்துவெளி தோன்றித்
தலையினும் மிடற்றிலும் நெஞ்சிலும் நிலை இப்
பல்லும் இதழம் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்பற்றமைய நெறிப்பட நாடி.(தொ,கா,எ,83)
தொப்புளிலிருந்து மேலே கிளர்கின்ற ஒளிக்காற்று நெஞ்சு, மிடறு, தலை, ஆகிய இடங்களில், நிலைகொண்டு. பல்,இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம், என்னும் உறுப்புகள் வழியாக வரும் ஒளியால் வெவ்வேறு எழுத்துக்களாக பிறக்கும். அப்படி வந்த எழுத்துகள் உயிர் தத்துவம் பெற்ற வார்த்தை தான் அம்மா, சொல்லும் போதே எத்தனை சுகம்பெருகிறது மணம். இந்த தமிழ் வார்த்தை எப்படி இருக்குகறது அனுபவித்து பாருங்கள். உடலுக்கு துன்பம் வந்தால் தன்னை அறியாமல் வெளிப்படும் வார்த்தை. சரி தமிழன் ஏன் இந்த வார்த்தையை மட்டும் தேர்வு செய்தான். உயிர் கொடுத்தவல் அம்மா, ஆகவே தமிழ் எழுத்தில் முதல் உயிர் எழுத்து, அ, தேர்வு செய்தான், உயிர் வளர மெய்,(உடல்)தேவை
எனவே, ம்,என்னும் மெய்யெழுத்தும் பத்து மாதம் கழித்து உயிர் +மெய் இரண்டையும் சேர்த்து உலவவிடுவதால் உயிர்மெய் எழத்தான, மா, என்னும் எழுத்தையும் சேர்தனர். இப்படி தான் தமிழன் தத்துவத்தின் அடிப்படையில் வார்த்தைகள் உருவகம் ஆனது. இது போல் அப்பா என்ற சொல்லும் உருவானது அதனைப் பற்றிய தகவல் பிறகு எழுதுகிறேன். அம்மா மென்மையானவர், மெல்லினத்திலும், அப்பா வன்மையாவர், என்பதால் வல்லினத்திலும், அமைத்தனர்.