வெள்ளி, 10 ஏப்ரல், 2015

யோகம் என்பது என்ன பாகம் எண் 3

கலவியில் இடகலையிலோ,பிங்கலையிலோ பிரித்திவி முதல் ஐந்து பூதங்களிலும் சரம் செல்லுமாயின் அவ்வமயம் கருவில் தோன்றும் குழந்தையின் வயது 100 _ஆண்டுகள் எனவும், _அப்புமுதல் நான்கு பூதங்களிலும் சரம் சென்றால் குழந்தையின் வயது 70 (சில நூல்கள் 80) ஆண்டுகள் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஐந்து நாழிகையில் உயிர்காலானது இடம் வலம் மாறும் நாழிகை 1 க்கு _20 மாவும் ;மா_1 க்கு 1 ஆண்டுமாகும். இங்ஙனமாயின் ஐந்து நாழிகைக்கு 20 *5 =100 மா (ஆண்டு) ஆகு‌ம். எனவே பிருதிவியை 1.1/2 நாழிகை நீக்கிவிட்டுப் பார்க்க 20*3.1/2 =70 ஆண்டுகள் கிடைக்கும். ஆயினும் இரேசக பூரமாகமாக செல்லும். சரத்தின் வகைகளை ஆராய்ந்து அறிந்து, விதிப்படிப் பழகி சரம் செல்லும் வழியில் செல்லுகின்ற யோகவழக்கம் உள்ளவர்கள், தன்விருப்பப்படி, ஏற்றலும், இறக்கலும், மாற்றலும், அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்காக,வாழ்தலும், வெளியில் பாய்ந்து செல்லும் தொழில்கள் கைகூடும். சித்தர் பெருமக்கள் இச்சரத்தை தன்வயப்படுத்தி தங்களது வாழ்நாளைப் பெருக்கிக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக