வைகாசி மாத பெளர்ணமி... வாழ்வில் வசந்தத்தை தரும் !! வாழ்வில்
வசந்தத்தை தரும் வைகாசி மாத பௌர்ணமி !!
🌕 பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்களை அடைய முடியும். வைகாசி மாத பௌர்ணமியான இன்று திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து விளக்கேற்றினால் விரைவில் திருமணம் நடைபெறும். வாழ்க்கை வசந்தமாகும்.
🌕 பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு அரளிப்பூ, செவ்வந்திப்பூ, செந்தாமரை மலர்களை மாலையாக அணிவித்து அர்ச்சிப்பார்கள். மகிழம்பூ நிறத்தில் பட்டு வஸ்திரம் சாத்தி, எள் அன்னம் படைத்து முக்கனிகளால் அபிஷேகித்து, பசும்பாலில் மாங்காயை வேக வைத்துப் படைப்பார்கள். இப்படிச் செய்வதால் பாவங்கள் அகலும், புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
🌕 மேலும், வைகாசி மாத பௌர்ணமியான இன்று சிவபெருமானை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாக குண்டம் அமைத்து வழிபடுவது நலம். இன்று யாகம் செய்வதற்கு குண்டத்தை தாமரை மலர் வடிவில் அமைத்து சந்தனாபிஷேகத்தை விசேஷமாகச் செய்வார்கள். அதனை தரிசித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். கிரிவலம் : ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் என்பதாகும்.
கிரிவலம் செல்லும்போது நாம் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
🌕 மலையைச் சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.
🌕 ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படியே செல்ல வேண்டும்.
🌕 வெயில் அல்லது மழைக்காக குடை பிடித்து செல்லக்கூடாது.
🌕 மலையைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
🌕 மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலையை வலம் வர தொடங்குவது சிறப்பு.
🌕 கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.
🌕 மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு.
🌕 தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு.
🌕 கிரிவலம் தொடங்கும்போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.
🌕 கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.
புதன், 30 மே, 2018
வைகாசி மாத பௌர்ணமி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)