ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

ஓகம் (யோகம்)

எல்லாம் வல்ல இறைவன் திருவருள் கொண்டு, ஈஸ்வர சைதன்ய, சொரூபமாகிய உங்களை வணங்கி இந்த தொடரினை எழுதுகிறேன், பிழை இருந்தால் ஆதாரங்கள் மூலம் சுட்டிக்காட்ட விழைகிறேன். யோகம் என்பது என்ன, 
யோகம் பற்றிய இந்திய ஞானிகளின் பொதுகருத்துகளையும், தமிழகத்தில் தலைசிறந்த ஞானிகளிளாகிய, சித்தர்களின் கருத்துக்களையும் இரண்டறக் கலந்து செய்ததே, முக்காலம் உணர்ந்த சித்தர் திருமூலரின் திருமந்திரம். 
கந்தபுராணம் கூற்று படி சூரனைக் கொல்லத் தம் ஐந்து முகத்துடன்,அதோமுகமும் சேர்த்து, இறைவன் ஆறுமுகனை தந்தார் _என்ற புராண வரலாற்றால் கூறும் உண்மை. 
மூலாதாரத்தில் இருந்து ஒரு சுடர் ஆறு ஆதாரங்களையும் கடந்து உச்சிக்கு போவது என்பதைக் குறித்தார். திருமந்திரம்,186 
மூளையும் தண்டுவடமும் பிரியும் இடமே அதோமுகமும் எனப்படும்.எண் திசை =எண்சாண் உடம்பு. அண்டம் மூளையும் தண்டுவடமும். (திருமந்திரம் 187)
நந்தி எழுந்து நடுவுற ஒங்கிய 
செந்தீ கலந்துஉள் சிவன் எனவே நிற்கும் 
உந்தி கலந்து அங்கு உலகை வலம் வரும் 
அந்தி இறைவனை அதோமுகமும் ஆமே. (
திருமந்திரம் 523) 
நந்தியைக் குருநாதராகக் கொள்வது இந்நூல் வழக்கம் இதற்கு முன் உயிர் காலின் இயக்கம் பற்றி தெரிந்து கொள்வோம். (சரம்) 
சரம் என்பது உயிர்க் காலின் பிராணவாயு அது மூக்கின் இரு துளைகளில் உள்ளும் புறமும் செல்வதாக இருக்கும். இடது மூக்குத்துளைக வழியில் செல்வதை இடகலை என்றும் வலதுமூக்கு துளைவழியாகச் செல்வதைப் பின்கலை என்றும் கூறப்படுகிறது. மூச்சுக் காற்று இரண்டும் ஒரே நேரத்தில் இரண்டு மூக்குத்துளை வழியில் செல்வதும் இல்லை வருவதும் இல்லை, அதாவது முதலில் இடத் துளைவழியாக ஐந்து நாழிகை (2 மணிநேரம்) தான் மூச்சு செல்லும் பின்னர் வலத்துளை மாறி ஐந்து நாழிகை நடக்கும். அதுவும், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில், இடப்பக்கம் காலை 4 மணிக்கு தொடங்கி ஐந்து ஐந்து நாழிகை இட பிங்கலையில் மாறி மாறி நடக்கும், செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வலப்புறம் தொடங்கி ஐந்து ஐந்து நாழிகை மாறி மாறி நடக்கும், இங்ஙனம் வியாழக்கிழமை வளர்பிறையில், இடப்பக்கம், தேய்பிறையில் வலப்புறம் நாசியில் மாறி மாறி நடக்கும். 

ஞாயிறு, 3 ஜூலை, 2011

சிவார்ப்பணம்.

அன்பு ஆன்மாக்களாகிய உங்களை வணக்கத்துடன் சந்திக்கிறேன். மனித வாழ்வை தெரிந்து கொள்வோமா?

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு யானையின் ஆயுட்காலம் 1000 ஆண்டாக இருந்தது. நாயின் ஆயுட்காலம் 14 ஆண்டாக இருந்தது. ஆமையின் ஆயுள் 5000 ஆண்டாகவும், பாம்பின் ஆயுள் 100 ஆண்டாகவும் இருந்தது. மனிதனது ஆயுட்காலம் 120 ஆண்டுகளாக இருந்தது.

தற்போது ஆமை, பாம்பு, யானை, நாய் ஆகியவற்றின் ஆயுட்காலம் அப்படியே இருக்க, மனிதனின் ஆயுள் மட்டும் 60 ஆக குறைந்து போனது. இத்தனைக்கும் ஆயுளை அதிகப் படுத்த பலவித மருத்துவ வசதிகள் வேறு உள்ளன. ஏன் இப்படி ஆனது?

இன்றைய வளரும் நாடுகளின் மக்களில் அதிக ஆயுட்காலம் வாழக் கூடிய மக்கள் சீனர்கள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் சீனர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று பார்ப்போம். சீனர்கள் எப்போதும் இயற்கையோடு ஒன்றி இருப்பதை நாம் பார்க்கிறோம். உணவு, உடை, வசிக்கும் முறை என அனைத்திலும் அவர்கள் இயற்கையோடு தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் பூமி பரப்பை எப்படி காத்தார்கள் என்பதற்கு சிறு உதாரணம்... சீன நாட்டின் மஞ்சள் ஆறு பற்றி நமக்கெல்லாம் தெரியும். அந்த நதியின் வெள்ளப் பெருக்கால் ஆண்டு தோறும் லட்ச கணக்கான மனிதர்களை சீனா இழந்தது. ஆனால் சீனாவின் துயரம் என்று அழைக்கப் பட்ட மஞ்சள் ஆறு இன்று, சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. சீனாவின் அறுபது சதவிகித நிலம், மஞ்சள் ஆறால் விளைகிறது. அப்படியாக அதனை பல கிளை நதிகளாகவும், கால்வாய்களாகவும் மாற்றியது அந்த தேசம். ஆக நில சக்தியை காக்க நீர் சக்தியை பரவலாக்கியதன் மூலம் தங்கள் நல சக்தியை எப்படி காத்தார்கள் என்பது நமக்கு தெளிவாகிறது. ஆகவே நீர் சக்தியால் நில சக்தியை கட்டுப்படுத்த முடியும் என்பதை சீனர்கள் மூலம் நாமும் உணர்வோம்.


(தொடரும்...)