புதன், 30 மே, 2018

வைகாசி மாத பௌர்ணமி.

வைகாசி மாத பெளர்ணமி... வாழ்வில் வசந்தத்தை தரும் !! வாழ்வில்
         வசந்தத்தை தரும் வைகாசி மாத பௌர்ணமி !!
🌕 பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்களை அடைய முடியும். வைகாசி மாத பௌர்ணமியான இன்று திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து விளக்கேற்றினால் விரைவில் திருமணம் நடைபெறும். வாழ்க்கை வசந்தமாகும்.
🌕 பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு அரளிப்பூ, செவ்வந்திப்பூ, செந்தாமரை மலர்களை மாலையாக அணிவித்து அர்ச்சிப்பார்கள். மகிழம்பூ நிறத்தில் பட்டு வஸ்திரம் சாத்தி, எள் அன்னம் படைத்து முக்கனிகளால் அபிஷேகித்து, பசும்பாலில் மாங்காயை வேக வைத்துப் படைப்பார்கள். இப்படிச் செய்வதால் பாவங்கள் அகலும், புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
🌕 மேலும், வைகாசி மாத பௌர்ணமியான இன்று சிவபெருமானை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாக குண்டம் அமைத்து வழிபடுவது நலம். இன்று யாகம் செய்வதற்கு குண்டத்தை தாமரை மலர் வடிவில் அமைத்து சந்தனாபிஷேகத்தை விசேஷமாகச் செய்வார்கள். அதனை தரிசித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். கிரிவலம் : ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் என்பதாகும்.
        கிரிவலம் செல்லும்போது நாம் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
🌕 மலையைச் சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.
🌕 ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படியே செல்ல வேண்டும்.
🌕 வெயில் அல்லது மழைக்காக குடை பிடித்து செல்லக்கூடாது.
🌕 மலையைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
🌕 மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலையை வலம் வர தொடங்குவது சிறப்பு.
🌕 கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.
🌕 மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு.
🌕 தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு.
🌕 கிரிவலம் தொடங்கும்போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.
🌕 கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.

ஞாயிறு, 28 மே, 2017

சித்தராக வாழ்ந்த மகான் உடலை எரிக்கலாமா.

              🌴 இறந்தவர்களைப் புதைக்க வேண்டும்.எரிக்கக் கூடாது என்பது வள்ளற் பெருமானின் கண்டிப்பான கட்டளை. இதனை திருவருட்பாவில் சமாதி வற்ப்புறுத்தல் என்ற தலைப்பில் காணலாம்.உபதேசங்களிலும் திருமுகங்களிலும் காணலாம்.புலால் மறுத்தல் சமாதி வற்ப்புறுத்தல் ஆகிய இரண்டிலும் வள்ளளார் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்.சமாதானத்திற்கு இடம் வைக்கவே இல்லை.
            🌴 கண்டிப்பு என்றால் கண்டிப்புதான்.பிணத்தை எரிப்பது கொலை என்கிறார்.அந்த அளவுக்கு  எரியூட்டுதலை கண்டிக்கிறார்.சன்மார்க உலகில் சுடுகாட்டுக்கு இடமில்லை இடுகாட்டுக்கு மட்டுமே இடமுண்டு.
              🌴 திருமூலரும் தம் திருமந்திரத்தில் "சமாதிக் கிரியை" என்றொரு அதிகாரமே பாடியுள்ளார்.பதின்மூன்று மந்திரங்கள்.ஞானியர் இறந்தால் அவர்கள் உடலை எரிக்கக்கூடாது,சமாதி செய்ய வேண்டும்  என்று சிலபாடல்கள் வற்ப்புறுத்துகின்றன.எப்படி சமாதி வைக்க வேண்டும்  என்று சமாதிக்கிரியைச் சில பாடல்கள் விவரிக்கின்றன.
               🌴வள்ளலாரது சமாதி வற்ப்புறுத்தலுக்கும் திருமூலரின் சமாதிக்கிரியைக்கும் ஒரே ஒரு வேறுபாடு இறந்த எல்லோரும் புதைக்கப் படவேண்டும் எரிக்கக்கூடாது என்கிறார் வள்ளலார். இறந்த ஞானியர் (துறவிகளை) ப் புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது என்கிறார் திருமூலர். இறந்தாறைப்பற்றி, பொதுமக்களைப்பற்றி  சொல்ல வில்லை.
           அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெம்பும் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரினுண் செரு
வந்து நாய் நரிக்கு உணவாகும் வையகமே.
             (திருமந்திரம் 1910)
              🌴ஞானியின் உடல் தீயில் வெந்தால் நாடே தீயினில் வெம்பும் : வெந்து போகும். நாய் நரி உண்டால் போர் வந்து நாட்டுமக்கள் நாய் நரிக்கு உணவாவர்.
எண்ணிலா ஞானி உடல் எரிதாவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.
            🌴(திருமந்திரம் 1911)
            🌴 ஞானியின் உடல் எரிக்கப்படுவது கோயில் எரிக்கப் படுவதற்க்கு ஒப்பாகும்.பூமியில் மழை பெய்யாது போகும். உலகில் பஞ்சம் உண்டாகும். மன்னர்கள் அரசை இழப்பர்.
புண்ணியமாம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லா மயங்கும் அனல் மண்டியே.
           🌴(திருமந்திரம் 1912)
           🌴 அவர்களைப் புதைப்பது புண்ணியம், எரித்தால் நாட்டில் அழிவு ஏற்ப்படும்.சரியாக சமாதி செய்யாமல் மண்ணில் அழிய விட்டால் நாட்டின் பொலிவு குன்றும்.மண்ணுலகெல்லாம் அனல் மண்டி மயங்கும்.
              🌴ஞானியின் உடம்பை எரித்தால் அது கோயிலை எரிப்பது போல் என்கிறார் திருமூலர்.நாட்டில் தீ விபத்துகள் ஏற்ப்படும், மழை பெய்யாது, போர்வரும், பஞ்சம் உண்டாகும் மன்னர் ஆட்சியை இழப்பர்,என்கிறார் எரிப்பதால் உண்டாகும் உற்பதங்கள் எத்தனை  எத்தனையோ? புதைப்பது  புண்ணியம் என்கிறார்.
உங்கள் அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம். (தொடரும்)

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

திருக்குறள் : 1கடவுள் வாழ்த்து!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
         பரிமேலழகர் உரை :எழுத்தெல்லாம்   அகர முதல்.
         உலகு ஆதி பகவன் முதற்று.
         எழுத்தெல்லாம் (அ) கரத்தை முதலாக உடையன.
         அதுபோல் ஆதிபகவன் உலகுக்கு முதல் என்கிறார்.
          திருவள்ளுவர் கூற்றுப்படி (அ)கரம் எழுத்துக்கெல்லாம் (அ)கரம் முதல் என்கிறார்.இது எப்படி சாத்தியம், தமிழ் எழுத்துக்கு வேண்டுமானால், (அ)கரம் முதலாக இருக்கலாம் சமஸ்கிருதம், உள்ளிட்ட ஏனைய மொழிக்கு எப்படி (அ)கரம் முதலாகும். என்று ஏனைய மொழியோர் கேட்கின்றனர்.அப்படியானால் பொய்யாமொழிப் புலவர் பொய்சொல்கிறாரா இல்லை!!
            உலகில் மொழி மற்றும் எழுத்து சப்தத்தை வைத்துதான் உருவானது அப்படி . சப்தம் உருவாகும் நிலை என்பது ஒன்று இன்னொன்றோடு உரசினால் தான் சப்தம் உருவாகும்.அப்படியிருக்க எந்தவித உரசலும் இல்லாமல் உருவாகும், சப்தம்தான் (அ)கரம் அப்படியே வாயை திறந்தால் வரும் சப்தம்தான் (அ)கரம் இது வாயை திறந்தால் வருவதில்லை வாயைதிறக்க வரும் சப்தம்தான் (அ)கரம் அப்படி எந்தவித உரசலும் இல்லாமல் வரும் சப்தத்தை பல்வேறு இடங்களில் முட்டச்செய்ய பழகித்தான் மற்ற எழுத்துக்கள் உருவாயின, அப்படி ஏனைய எனையமொழிக்கும் முதல் சப்தத்திற்கும் முதல் (அ)கரம் மே முதல்.
         அப்படியானால் எழுத்தில் எப்படி (அ) கரம் எப்படி முதலாகும். உலகில் எழுத்துரு உருவாக நான்கு குறியீடுகளைப் பயன்படுத்தித்தான் உருவாக்கினர், எந்த மொழி எழுத்தும் அப்படித்தான்.அந்தக் குறியீடுகள் (1) சுழியம், (2) பிறைவடிவம்,(3)குறுக்குக்கோடு,(4)நெடுங்கோடு. இப்படி நான்கு குறியீடுகளை வைத்துத்தான் எழுத்துரு அமைக்கப்பட்டது. அப்படி ஏனையமொழிகளில் இந்தக் குறியீட்டில் இரண்டு அல்லது மூன்று குறிகளைக் கொண்டுதான்.உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் எழுத்தான (அ)கரம் நான்கு குறியீட்டையும் உள்ளடக்கிய எழுத்து (அ)கரம் எனவேதான் எழுத்தெல்லாம் அகரமுதல என்றார் வள்ளுவப் பெருந்தகை.
         அதுபொல உலகம் எல்லாம் இறைவனான ஆதி பகவனை முதலாக கொண்டுள்ளது என்று என்தமிழே உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்.இந்தமொழியை பெருமை படவைத்த வள்ளுவப் பெருந்தகையை திருக்குறளை நம் சந்ததிக்கு சொல்ல கடமை பட்டவர்கள் தமிழர்களாகிய நாம்.
         வாழ்க செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழ்க பாரதம்.
        அன்புடன் ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பனம்.

வியாழன், 15 டிசம்பர், 2016

ஓம் என்றால் என்ன.

            ஓம் என்பதன் விளக்கம் .
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
       👉 ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து
வைத்துள்ள ஒரு பெயராகும்.
            👉 ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்மூர்த்திகளை படைத்த பராசக்தி ஓம் காரத்தில் இருந்து தோன்றினால் என்று வரலாறு கூறுகிறது. மேலும் பிரம்மா ஒம் காரத்தை வைத்து தான் உலக ஜீவன்களை படைக்கிறார் ஓம் என்பதற்க்கு பிரணவம் என்று பொருள், பிரணவம் என்றால் முடிவில்லாதது என்று கூறுவார்கள்.
          👉 இந்த ஓம் என்பதை வைத்து தான் மந்திரம் தொடங்கப்படுகிறது ஏனென்றால் இதுதான் பிரபஞ்சத்தின் சாவி இதை உச்சரித்து கூறும்போது அந்த சொல் வலிமை அடைகிறது.
          👉 ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹhபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க ஓம் என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது. ஓம்-ன் பொருள் :
         👉 ஓம் என்பதை பிரித்தால் அ காரம் உ காரம் ம காரம்
         👉 அ காரம் என்பது சிவம் : வலதுகண் சூரியன்
         👉 உ காரம் என்பது சக்தி (பார்வதி) : இடதுகண் சந்திரன்
         👉 ம் காரம் என்பது இரண்டும் சேர்ந்தது : புருவமத்தி சுழுமுனை மற்றொரு பொருள் : அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது. இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து.
         மேலும் அ என்பது இறைவனையும், உ என்பது உலக உயிர்களையும், ம் என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த அ, உ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த ம் என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது. மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும்.
   அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பனம்.

திங்கள், 28 நவம்பர், 2016

மனுமுறைக் கண்ட வாசகம்

       திரு அருட் பிரகாச வள்ளளார் நமது  பிறப்புக்கு காரனமாவதை பட்டியலிடுகிறார்.
       நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனே!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனே!
       தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனே!
கலந்த சினேகரைக் கலகம் செய்தேனே!
       மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனே!
குடிவரி யுயர்த்தி கொள்ளை கொண்டேனே!
       ஏழைகள் வயிறு எரியச் செய்தேனே!
தருமம் பாராது தண்டம் செய்தேனே!
       மண்ணேரம் பேசி வாழ்வழித்தேனே!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனே!
       களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனே!
பொருளை இச்சித்து பொய் சொன்னேனே!
        ஆசைகாட்டி மோசம் செய்தேனே!
வரவுபோக்கொழிய வழியடைத்தேனே!
       வேலையிட்டி கூலி குறைத்தேனே!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனே!
        இரப்போர்க்கு பிச்சை இல்லையென்றேனே!
கோள் சொல்லி குடும்பங் கலைத்தேனே!
       நட்டாற்றில் கையை நழுவ விட்டேனே!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனே!
        கற்பழித்தவரைக் கலந்திருந்தேனே!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனே!
       கணவன் வழிநிற்போறைக் கற்பழித்தேனே!
கருப்பமழித்து களித்திருந்தேனே!
        குருவை வணங்கக் கூசிநின்றேனே!
குருவின் கானிக்கை கொடுக்க மறந்தேனே!
       கற்றவர் தம்மை கடுகடுத்தேனே!
பெரியோர்பாட்டிற் பிழை சொன்னேனே!
       பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனே!
கன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேனே!
        ஊன்களை உண்டு உடலை வளர்த்தேனே!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனே!
        அன்புடையவர்க்கு துன்பஞ்செய்தேனே!
        இவ்வாறு வள்ளார் சுவாமிகள் தன்பிறப்புக்கும் வாழ்கைக்கும் இதெல்லாம் காரணமானதோ என்றோ என்று மனம் உருகுகின்றார் இறைவனிடம்.
         மேலே உள்ள கலக்கத்தில் சிக்காத மனிதன் உண்டு என்றால் அதுவும் வள்ளளாரே பிறகு ஏன் இந்த பாடல்.இந்த பாவங்கள் நம்பிறப்புக்கு காரணம் ஆகும் ஆகவே அதை நீக்க வேண்டும் என்கிறார்.வள்ளளாரின் பாதம் போற்றி நாமும் நாமும் வாழ்வோம்.அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை!அருட்பெரும் ஜோதி.
     அன்புன் ஆத்மா த.சிவகிரி  . ஓம் சிவார்ப்பனம்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

பஞ்சமி திதி நாள்- ஸ்ரீ வராஹி வழிபாடு

              🌟 வாழ்வளிக்கும் ஸ்ரீவாராஹி தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்த மாதர்களின் மகிமையை தேவி மஹாத்மியம் முதலான ஞான நூல்கள் விரிவாக விளக்குகின்றன.
           மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது தேவிமஹாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் 'சப்த ஸதீ" என்று போற்றப்படுகிறது.
             🌟 இந்த நு}ல், அசுரர்களாகிய சும்ப - நிசும்பர்களை அழிக்க ஆதி சக்திக்கு உதவியாக அவதரித்தவர்கள் சப்தமாதர்கள் என்று விவரிக்கிறது. இவர்களில் வாராஹி தேவியை வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இவளை வழிபடுவார்கள்.
        வழிபட உகந்த நாட்கள் :
           பஞ்சமி திதி நாட்கள். அர்ச்சனைப் பொருட்கள் : குங்குமம், செந்நிறப் பூக்கள்.
    புண்ணிய நூல் : வாராஹிமாலை
                      நிவேதனம் :
        🌟 தோல் நீக்காத பூண்டு கலந்த உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன். சிறப்பு வழிபாடு :
             🌟 பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீவாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், நிவேதனமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பதார்த்தங்களை நிவேதனம் செய்து, வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.
        🌟 மேலும் அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றி கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் அருள்வாள். வழிபாட்டு மந்திரங்கள், வாராஹி மாலையில் ஒரு பாடல்...
          இருகுழை கோமளம் தாள்புட்ப ராகம்
       இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை
       கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக்கனிவாய் பவளம்
       சிறந்த வல்லி மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!
      🌟 பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் இந்தப் பாடலையும் பாடி மனமுருகி வாராஹிதேவியை வழிபட, நமக்கு துணை நிற்பாள். அஸ்வினி, பரணி, மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.
      அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.

வியாழன், 17 நவம்பர், 2016

முருகபெருமானின் ஆறு முகம் அறிந்து கொல்வோம்.

முருகனின் ஆறு முகங்கள் என்ன தெரியுமா?
        🌟 “வேலனை வணங்குவதே நமது முதல் வேலை” என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன். தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். இதனை “முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்” என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.
         🌟 இப்படி பல சிறப்புகளைக் கொண்ட முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளது. அந்த ஆறுமுகங்கள் என்ன என்று இங்கு பார்ப்போம்.
         🌀 ஒரு முகம், பூங்கொடி போன்ற இடையைக் கொண்டு குறத்தி வள்ளியுடன் புன்னகையோடு நமக்குக் காட்சி தரும் முகம்.
        🌀 குற்றம் இல்லாமல் திகழ்வதற்காகப் பல கதிர்களை விரித்து வெளிச்சம் தரும் முகம் தான் இரண்டாவது முகம்.
       🌀 முருகனைச் சுற்றி நின்ற படி அவரை புகழ்ந்து பாடுபவர்களைப் பார்த்து இனிமையாகச் சிரித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் தரும் முகம் தான் இந்த மூன்றாவது முகம்.
       🌀 அந்தணர்கள் சிரத்தையாக அமர்ந்து வேதங்களை முழங்கி பல யாகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்கிறது முருகனின் நான்காவது முகம்.
       🌀 முருகனின் முகத்தை நாம் சூரியனாகவோ அல்லது சந்திரனகவோ காணப்படும் முகம் தான் ஐந்தாவது முகம்.
      🌀 உலகத்தில் எல்லாம் நல்லதாக நடந்துகொண்டிருக்கும் போது, நடுவே சில தீய சக்திகளும் திகழும். அப்போது தீய சக்திகளோடு போர் செய்து வெல்லும், அது மட்டுமல்லாமல் நமக்கு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் முகம் தான் ஆறாவது முகம்.
           அன்புன் ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பனம்.